லைஃப்ஸ்டைல்

சைவப்பிரியர்களே.! உங்களுக்கான அசைவ சுவையில் ஒரு சைவ ரெசிபி ரெடி ..

Published by
K Palaniammal

சோயாவில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பொருள் தான் சோயா ஜங் அதாவது மீல் மேக்கர்.. இறைச்சிக்கு சமமான புரோட்டினை இந்த மீல் மேக்கர் கொண்டுள்ளது. பருப்பு வகைகளில் இரண்டு மடங்கு புரதம் சோயாவில் தான் அதிகம் உள்ளது.

இந்த மீல் மேக்கரை வைத்து 65 வருவல், கிரேவி குழம்பு மற்றும் பிரியாணி என பல வகையில் நாம் ருசித்திருப்போம். இன்று நாம் ஒரு வித்தியாசமான முறையில் ஒரு அசத்தலான அசைவச் சுவையில் மீல் மேக்கர் கிரேவியை செய்து ருசிப்போம். மேலும் இதை யார் யார் எடுத்துக்கொள்ளக் கூடாது மற்றும் அதன் பக்க விளைவுகள், நன்மைகள் பற்றி இந்த பதிவில் வாசிப்போம்.

தேவையான பொருள்கள் :

*சோயா உருண்டை=100ஜி
*பெரிய வெங்காயம்=2
* தக்காளி=4
* பிரியாணி இலை=2
* பட்டை=2 கிராம்பு=2
* சீரகம்=1ஸ்பூன்
* மிளகு=1ஸ்பூன்
* சோம்பு =1ஸ்பூன்
* காய்ந்த மிளகாய்=3
* புதினா மற்றும் கொத்தமல்லி தேவையான அளவு.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சீரகம் சோம்பு, மிளகு, பிரியாணி இலை ஒன்று, சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு அதை நைசாக கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்.

சோயாவை 10 நிமிடம் சுடு தண்ணீரில் போட்டு எடுத்து அதை தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். அதிலே அரைத்த பேஸ்டையும் கூடவே உப்பையும் சேர்த்து கலந்து ஒரு பத்து நிமிடம் ஊற வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். அதிலே வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி தக்காளியையும் சேர்க்கவும். சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கொள்ளவும். நன்கு வதங்கியதும்,கால் ஸ்பூன் மஞ்சள் தூள், மல்லித்தூள் 2 ஸ்பூன் சேர்த்து வதக்கவும். பிறகு சோயா உருண்டைகளையும் சேர்த்து கிளறவும். தண்ணீர் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளவும். ஐந்து நிமிடம் மூடி போட்டு வேகவைத்து அதிலே புதினா கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கவும். இப்போது கம கம வென சோயா கிரேவி ரெடி..

சத்துக்கள்:
புரோட்டின் மிக அதிக அளவு நிறைந்துள்ளது. மேலும் ஒன்பது வகையான அமினோ ஆசிட்டுகள் உள்ளது.

கொழுப்புச்சத்து குறைவாக உள்ளது.

நார்ச்சத்து, கால்சியம் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் அதிகம் உள்ளன .

நன்மைகள்:

  • புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளதால் நல்ல தசை வளர்ச்சியை ஏற்படுத்தும்.
  • தைராய்டு அதிகம் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ளலாம். ஏனென்றால் இது தைராய்டு குறைக்கும் தன்மை கொண்டது.
  • மேலும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும்.
  • கொழுப்பு குறைவாக உள்ளதால் உடல்எடை குறைக்க நினைப்பவர்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இது ஈஸ்ட்ரோஜனை அதிக அளவு உற்பத்தி செய்யக்கூடியது.

தவிர்க்க வேண்டியவர்கள் :

  • ஐசோ  ப்ளேவொன்ஸ் என்ற ரசாயன பொருள் இதில் உள்ளது. இது ஒரு பைட்டோ ஈஸ்ட்ரோஜன் வகையைச் சேர்ந்தது. இதை அதிகம் எடுத்துக் கொண்டால் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தும்.
  • ஆண்கள் இதை அதிகமாக எடுத்துக் கொண்டால் ஹார்மோன் மாற்றங்களை ஏற்படுத்தும். ஆகவே வாரத்துக்கு இரண்டு நாள் மட்டும் எடுத்துக் கொள்வது நல்லதாகும்.
  • தைராய்டு குறைவாக உள்ளவர்கள் இதை தவிர்க்க வேண்டும்.
    ஆகவே எந்த ஒரு உணவுப் பொருளையும் நாம் அளவோடு தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Published by
K Palaniammal

Recent Posts

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

7 minutes ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

2 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

2 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

5 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

5 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

7 hours ago