படுக்கை அறையை இந்த திசையில் இப்படி அமைத்தால் இங்கு நேர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கும்.
வீட்டில் எந்த அறை இருந்தாலும் படுக்கை அறை ஸ்பெஷல் தான். நாம் எவ்வளவு உடல் வலியில் இருந்தாலும் உடல் களைப்பாக இருந்தாலும் அசந்து உறங்க படுக்கை அறையை தேடுவோம். இந்த அறையில் நீங்கள் ஓய்வெடுத்து எழுந்த பிறகு புத்துணர்ச்சியோடு இருப்பீர்கள். இந்த படுக்கை அறையை நமது வீட்டில் எங்கு அமைக்க வேண்டும் என்பதும் முக்கியமான ஒரு விசயம். வீட்டில் இருக்கும் படுக்கை அறையை வாஸ்துப்படி எப்படி அமைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
டிப்ஸ் 1: படுக்கையறைக்கு சிறந்த திசை வீட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆகும். இதைத்தவிர வேறு சிறந்த திசைகள் வீட்டின் கிழக்கு மற்றும் மேற்கு. வீட்டின் நடுவே நின்று திசைகாட்டியை பயன்படுத்தி திசைகளை தெரிந்து கொள்ளலாம்.
டிப்ஸ் 2: படுக்கை அறையில் நீங்கள் தூங்கும்போது உங்கள் தலை தென்கிழக்கு அல்லது மேற்கு திசையில் இருக்கும் வகையில் இருக்க வேண்டும். வடக்கு நோக்கி தலை வைத்து உறங்கவே கூடாது.
டிப்ஸ் 3: உங்கள் படுக்கை அறையின் நிறம் மிகவும் முக்கியமான ஒன்று. படுக்கை அறைக்கு பிரகாசமான நிறத்தை பயன்படுத்த கூடாது. ஆஃப்-வெள்ளை, கிரீம் அல்லது பீஜ் போன்ற நிறத்தை பயன்படுத்தலாம். வேறு நிறம் தேர்ந்தெடுத்தாலும் அதில் லேசான நிறத்தை பயன்படுத்துவது சிறந்தது. அறையின் பெரிய பகுதிகளில் பளிச்சென்று இருக்கும் நிறத்தை தவிர்ப்பது நல்லது. அறை பார்ப்பதற்கு பிரகாசமாக இல்லை என்று உணர்ந்தால் மெத்தை, தலையணைகள் போன்றவற்றில் பளிச்சென்று இருக்கும் நிறத்தை பயன்படுத்தலாம்.
டிப்ஸ் 4: உலோக கட்டில் உபயோகித்தால் மின்மாசு அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது. இது உங்கள் தூக்கத்தை சீர்குலைத்துவிடும். மேலும், உடல்நல பிரச்சனைகளை அதிகரிக்கும். அதனால் மரத்தால் செய்யப்பட்ட படுக்கையில் எப்போதும் தூங்குவது நல்லது.
டிப்ஸ் 5: படுக்கை அறையில் தேவையில்லாத பெட்டி படுக்கையை வைக்க கூடாது. அதிலும் குறிப்பாக கட்டிலுக்கு கீழே பெட்டிகளை வைப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் தூசி, துகள் அதிகமாகி உங்கள் படுக்கை அறை மாசாகிவிடும். அதுமட்டுமில்லாமல் இதுபோன்று தேவையில்லாத பொருட்களை படுக்கை அறையில் குவிப்பதால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும். அதனால் எப்பொழுதும் கட்டிலுக்கு கீழே காற்றோட்டமாக வைத்து கொள்ளுங்கள்.
டிப்ஸ் 6: படுக்கை அறையில் தூக்கம் வரவில்லை என்றாலோ அல்லது காலையில் எழும்போது தலைவலி இருந்தாலோ உங்களுடைய படுக்கையை ஒளிக்கற்றையை பார்க்கும் படி அமைத்துள்ளீர்கள் என்று அர்த்தம். இது போன்று இருந்தால் உங்கள் படுக்கையை நீங்கள் மாற்றம் செய்து கொண்டு தூங்குவது சிறந்தது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…