இரண்டு உருளைக்கிழங்கு இருந்தா போதும்.! சூப்பரான காலை உணவு ரெடி.!

Published by
K Palaniammal

Hash brown recipe-ஹாஸ் பிரௌன்  செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

  • உருளைக்கிழங்கு =350 கிராம் =3 கிழங்கு
  • பெரிய வெங்காயம் =2
  • முட்டை =2
  • கருவேப்பிலை =சிறிதளவு
  • கொத்தமல்லி இலை =சிறிதளவு
  • கரம்மசாலா =1/2 ஸ்பூன்
  • மிளகாய் தூள் =2 ஸ்பூன்
  • மிளகு தூள் =கால் ஸ்பூன்
  • எண்ணெய் =தேவையான அளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை தோல் சீவி துருவி, கழுவி கொள்ளவும். அப்போதுதான் அதில் உள்ள வழவழப்பு தன்மை நீங்கி சாப்பிடுவதற்கு மொறுமொறுவென இருக்கும். பிறகு வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு ,வெங்காயம், கடலை மாவு, முட்டை கருவேப்பிலை ,கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா ,மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும், தண்ணீர் சேர்க்கக்கூடாது.

இப்போது தோசை கல்லில் எண்ணெய்  தடவி நம் செய்து வைத்துள்ள கலவையில் ஒரு கரண்டி எடுத்து தோசை கல்லில் வைத்து சதுர வடிவில் தட்டிக் கொள்ளவும். ஒரு பகுதி வெந்தவுடன் மற்றொரு பகுதியை திருப்பி போடவும்.

இவ்வாறு திருப்பி திருப்பி போட்டு வேகவைத்து எடுத்தால் பொன்னிறமாகவும் கிருப்சியாகவும்  இருக்கும். இந்த முறையில் நாம் கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவை அனைத்தையும்  செய்து எடுத்தால் சுவையான ஹாஸ்  பிரௌன்  தயாராகிவிடும்.

Recent Posts

“எதாவது ஒரு தொடரில் வாய்ப்பு கிடைக்கும்” …நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஷர்துல் தாகூர்!

மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…

50 seconds ago

தமிழகத்தில் 7 மணி வரை பரவலான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!!

சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…

30 mins ago

“அந்த விஷயத்துக்கு காசு கூட வாங்கல”…தனுஷ் – நயன்தாராவுக்கும் இப்படி ஒரு நட்பா?

சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…

1 hour ago

உ.பி. தீ விபத்து : உயிரிழந்த 10 குழந்தைகளுக்கு நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி!

ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…

2 hours ago

சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்துள்ளீர்களா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…

2 hours ago

தமிழகத்தில் திங்கள் கிழமை (18/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…

2 hours ago