இரண்டு உருளைக்கிழங்கு இருந்தா போதும்.! சூப்பரான காலை உணவு ரெடி.!
Hash brown recipe-ஹாஸ் பிரௌன் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- உருளைக்கிழங்கு =350 கிராம் =3 கிழங்கு
- பெரிய வெங்காயம் =2
- முட்டை =2
- கருவேப்பிலை =சிறிதளவு
- கொத்தமல்லி இலை =சிறிதளவு
- கரம்மசாலா =1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள் =2 ஸ்பூன்
- மிளகு தூள் =கால் ஸ்பூன்
- எண்ணெய் =தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கை தோல் சீவி துருவி, கழுவி கொள்ளவும். அப்போதுதான் அதில் உள்ள வழவழப்பு தன்மை நீங்கி சாப்பிடுவதற்கு மொறுமொறுவென இருக்கும். பிறகு வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் துருவிய உருளைக்கிழங்கு ,வெங்காயம், கடலை மாவு, முட்டை கருவேப்பிலை ,கொத்தமல்லி, மிளகாய் தூள், கரம் மசாலா ,மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும், தண்ணீர் சேர்க்கக்கூடாது.
இப்போது தோசை கல்லில் எண்ணெய் தடவி நம் செய்து வைத்துள்ள கலவையில் ஒரு கரண்டி எடுத்து தோசை கல்லில் வைத்து சதுர வடிவில் தட்டிக் கொள்ளவும். ஒரு பகுதி வெந்தவுடன் மற்றொரு பகுதியை திருப்பி போடவும்.
இவ்வாறு திருப்பி திருப்பி போட்டு வேகவைத்து எடுத்தால் பொன்னிறமாகவும் கிருப்சியாகவும் இருக்கும். இந்த முறையில் நாம் கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவை அனைத்தையும் செய்து எடுத்தால் சுவையான ஹாஸ் பிரௌன் தயாராகிவிடும்.