அரிசி பருப்பு சாதம் சுவை கூட இந்த ஸ்டைல்ல செய்ஞ்சு பாருங்க.!

அரிசி பருப்பு சாதம் -சுவையான அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்;
- பச்சரிசி =1 கப்
- துவரம் பருப்பு =அரை கப்
- நல்லெண்ணெய் =3 ஸ்பூன்
- நெய் =3 ஸ்பூன்
- கடலை பருப்பு =1 ஸ்பூன்
- கடுகு உளுந்து =1 ஸ்பூன்
- சீரகம் =1 ஸ்பூன்
- சோம்பு =1 ஸ்பூன்
- வெங்காயம் =2
- தக்காளி =3
- பச்சைமிளகாய் =2
- இஞ்சி=1 துண்டு
- பூண்டு =5 பள்ளு
- மிளகாய் தூள் =1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
- பெருங்காயம் =அரை ஸ்பூன்
- கருவேப்பிலை கொத்தமல்லி =சிறிதளவு
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி துவரம்பருப்பு இரண்டையும் சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பிறகு ஒரு குக்கரில் நல்லெண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கடலைப்பருப்பு உளுந்தம் பருப்பு, கடுகு, சீரகம் ,சோம்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் பெரிய வெங்காயம் ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் இஞ்சி ஒரு துண்டு துருவி சேர்த்துக் கொள்ளவும் அதனுடன் ஐந்து பள் பூண்டு தட்டி சேர்த்துக் கொள்ளவும். நன்கு வாசனை வரும் வரை வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்து வரும் வேளையில் மிளகாய் தூள் ,பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும். பின்பு கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் ஊறவைத்த பச்சரிசி ,துவரம் பருப்பு இரண்டையும் சேர்த்து மசாலாவில் கலந்து விடவும் அதனுடன் உப்பு சேர்த்துக் கொள்ளவும்.பின்பு 2.1/2கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் விட்டு இறக்கவும். பிறகு ஒரு கைப்பிடி கொத்தமல்லி ,நெய் சேர்த்து இறக்கினால் சுவையான அரிசி பருப்பு சாதம் தயார்.