நமது படுக்கை விரிப்புகள் மற்றும் படுக்கை தலையணைகளை விட நமது வீட்டின் கழிப்பறைகள் தூய்மையானவை மற்றும் கிருமிகள் இல்லாதவை என ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணைகளில் வளரும் பாக்டீரியாக்கள்
க்யூரியஸ்காஸ்ட் நெட்வொர்க்கில் சூப்பர் அற்புதமான அறிவியல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஜேசன் டெட்ரோ என்ற நுண்ணுயிரியல் நிபுணரின் கூற்றுப்படி, மில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் நமது படுக்கை விரிப்புகளில் வளர்கின்றன என தெரிவித்துளளார்.
படுக்கை விரிப்பு
சமீபத்திய ஆய்வின் போது, சிலர் தங்கள் வீடுகளில் 4 வாரங்கள் பயன்படுத்திய புதிய படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணையை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணையை நுண்ணோக்கியை வைத்து ஆய்வு செய்தனர்.
ஒரு மாதம் பயன்படுத்தப்பட்ட படுக்கை விரிப்பில் 10 மில்லியனுக்கும் அதிகமான பாக்டீரியாக்கள் இருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியாக்களின் எண்ணிக்கை உங்கள் டூத் பிரஷ் ஸ்டாண்டில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை விட 6 மடங்கு அதிகம்.
அதேபோல், 3 வார படுக்கை விரிப்பில் 90 லட்சம் பாக்டீரியாவும், 2 வார படுக்கை விரிப்பில் 50 லட்சம் பாக்டீரியாவும், 1 வார படுக்கை விரிப்பில் 45 லட்சம் பாக்டீரியாவும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலையணை
நமது படுக்கை விரிப்பை விட நமது தலையணையில் அதிகமான அழுக்குகள் காணப்படுகிறது. நமது முகம் மற்றும் முடி தலையணையில் இருப்பதால், வியர்வை மற்றும் இறந்த சரும செல்கள் அதில் ஒட்டிக்கொள்ளும்.
4 வார பயன்படுத்தப்பட்ட தலையணை உறையில் 12 மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன. 1 வாரம் பயன்படுத்தப்பட்ட தலையணை உறையில் சுமார் 5 மில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன. இந்த கிருமிகளை நமது படுக்கை விரிப்புகளிலும் கொண்டு வருவதற்கு நாம் மட்டுமே பொறுப்பு. எனவே ஒவ்வொரு வாரமும் படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகளை மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…