இன்று சர்வதேச புலிகள் தினம்!
இந்தியாவின் தேசிய விலங்கு புலி. காட்டுக்கு ராஜா சிங்கம் தான். ஆனால், கம்பீரமான தோற்றமும், தனித்து நின்று போராட கூடிய குணமும் கொண்ட விலங்கு புலி. இந்த புலிகளை நாம் கூட்டமாக பார்க்க முடியாது. புலிகள் சிங்கத்தை கூட தோற்கடிக்கும் ஆற்றல் கொண்டது. இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புலிகளை நமது முன்னோர்கள் நேரடியாகவோ அல்லது காடுகளிலோ பார்த்திருக்க கூடும். ஆனால், நமது தலைமுறையினர் இன்று தொலைக்காட்சிகளிலும், விலங்குகள் அருங்காட்சியகத்தில் தான் பார்க்க முடிகிறது. நமக்கடுத்து வரும் சந்ததியினர் அருங்காட்சியகத்திலாவது பார்க்க முடியுமா என்றால் அது கேள்வி குறி தான்.
புலிகள் தோலுக்காகவும், வியாபாரத்திற்காகவும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் வேட்டையாடப்படுகிறது. புலிகள் அதிகமாக வாழும் நாடுகளில் இந்தியா முதல் இடத்தில உள்ளது. இரண்டாவது இடத்தில் ரஷ்யாவும், மூன்றாவது இடத்தில் இந்தோனேஷியாவும் உள்ளது.
வனவிலங்குகள் இறைவன் நமக்கு கொடுத்த மிகப்பெரிய கொடை. அவற்றிற்கு உயிர்வாழ்வதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டுமே தவிர, அவற்றை அழித்து நாம் உயிர்வாழ்வதற்கான வழிகளை மேற்கொள்ள கூடாது. எனவே வனவிலங்குகள் அழிக்கப்படுவதை தடுப்போம். அவற்றை பாதுகாப்போம்.