Toast : இந்த 3 பொருட்கள் இருந்தா போதும்..! அசத்தலான முட்டை வாழைப்பழம் டோஸ்ட் ரெடி..!
நமது வீட்டில் குழந்தைகளுக்கு தினமும் புதுவகையான உணவுகளை செய்து கொடுக்க வேண்டும் என்று தான் பெற்றோர் விரும்புவதுண்டு. அந்த வகையில் தற்போது இந்த பதிவில், முட்டை வாழைப்பழம் டோஸ்ட் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
முட்டையில் புரதம், வைட்டமின்கள், மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. வாழைப்பழங்களில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளன. முட்டை வாழைப்பழம் டோஸ்ட்டை, ஒரு சத்தான காலை உணவாகவும் கொடுக்கலாம், ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம்
இதையும் படியுங்கள் : Ladies Finger Pakoda : உங்க வீட்டில வெண்டைக்காய் இருக்கா..? அப்ப இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க..!
தேவையானவை
- 2 முட்டைகள்
- 1 வாழைப்பழம்
- 1 தேக்கரண்டி சர்க்கரை
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 1 ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய்
Toast செய்யும் முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின், வாழைப்பழத்தை முதலில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பவுலில் முட்டை, சர்க்கரை சிறிதளவு, உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு கடாயில் நெய்அல்லது எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். கடாயில் முட்டை கலவையை ஊற்றி குறைந்த தீயில் வைத்து கிளற வேண்டும். பின் அதன் மேல் வாழைப்பழத்தை தூவி மூடி வைக்க வேண்டும். தூவப்பட்ட வாழைப்பழங்கள் வெந்து இள சிவப்பு நிறமாக மாறும் வரை மூடி வைத்து பின்பு இறக்க வேண்டும். இப்போது சூடாக பரிமாறலாம்.
இதனை உணவாக மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவாக கருதலாம். இதனை குழந்தைகளுக்கு அடிக்கடி செய்து கொடுத்து வானதால், அவர்களது உடல் ஆரோக்கியம் மேம்படும்.