வெயிலின் தாக்கத்தால் முகம் கருத்துவிட்டதா?இப்படி சருமத்தை பாதுகாத்து கொள்ளுங்கள்..!

Default Image

கோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலில் சருமம் பாதிக்கப்படுவதை எப்படி தவிர்க்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

கோடைக்காலத்தில் அதிக சூரிய ஒளியின் தாக்கத்தால் சருமத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் வியர்வை ஏற்படுகிறது. இது அதிகப்படியாகும் பொழுது பிசுபிசுவென ஒட்டும் தன்மை ஏற்படும், அதனுடன் முகப்பரு, சொறி போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, நீங்கள் எவ்வளவு விலையுயர்ந்த காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அவை அனைத்தும் சிறிது நேரங்களில் மட்டுமே சருமத்தை காக்கும். ஆனால் நிரந்தர தெளிவான சருமம் கிடைப்பது என்பது நாம் பராமரிக்கும் விதத்தில் தான் இருக்கிறது. கோடை காலத்திலும் சருமம் பளபளப்பாக இருக்க என்னென்ன விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்:
கோடைக்காலத்தில் சக்திவாய்ந்த சூரிய ஒளியின் தாக்கத்தால், சருமத்தில் கருமை மட்டுமல்ல நிறைய பாதிப்புகளையும் ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில் சூரிய ஒளியில் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு உங்கள் தோலில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த வேண்டும். மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவதற்கு இடையே 15 முதல் 20 நிமிடங்கள் இடைவெளி இருக்க வேண்டும். இது சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து உங்களது தோலை 97 சதவீதம் வரை பாதுகாக்கும்.

அலோ வேரா ஜெல்:
தினமும் வீட்டிற்கு வந்த பிறகு, சருமத்தை நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் கற்றாழை ஜெல்லை முகத்தில் பயன்படுத்துங்கள். கற்றாழை ஜெல் சருமத்தை குளிர்விப்பது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பளபளப்பாகவும் மாற்றும்.

முகத்தை சுத்தம் செய்தல்:
வாரத்திற்கு இரண்டு முறையாவது முகத்தை நன்கு ஸ்க்ரப் செய்து இறந்த செல்களை நீக்க வேண்டும். இதற்கு சர்க்கரையில் எலுமிச்சை சாறு கலந்து உங்கள் கைகளால் முகத்தை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 10 நிமிடம் கழித்து தண்ணீரில் முகத்தை சுத்தம் செய்யவும்.

ஃபேஸ் பேக் போடவும்:
உங்கள் சருமத்தை கருத்து போகவிடாமல் தடுக்க வீட்டில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துங்கள். இதற்கு கால் கப் காய்ச்சாத பாலில் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் இரண்டு ஸ்பூன் தக்காளி சாறு கலந்து சருமத்தில் பேக்காக பயன்படுத்தவும். இது தவிர, வாழைப்பழ ஃபேஸ் பேக் அல்லது பப்பாளி ஃபேஸ் பேக் போன்றவற்றையும் முகத்திற்கு பயன்படுத்தலாம். இது முகத்தை பளபளப்பாக வைக்க உதவும்.

நிறைய தண்ணீர் குடிக்கவும்:
தண்ணீர் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உங்கள் சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது. கோடையில் உடலுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. அதனால் அதிக அளவு தண்ணீர் குடிக்கவும். இதனால் உடலும் சரி சருமமும் சரி ஆரோக்கியமாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்