உங்க கிட்னியை புதுசா வச்சுக்கணுமா? அப்ப இந்த பதிவை படிங்க..!

kidneys healthy

நம் உடலில் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம்தான். இது பழுதாகிவிட்டால் கை, கால், முகம் மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளான நுரையீரலை சுற்றி உள்ள சவ்வுகளில்  கழிவுகள் தேங்காய் துவங்கும். இதனால் நடக்க முடியாமல் போவதோடு மட்டுமல்லாமல் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும். இந்த சிறுநீரக பிரச்சனை சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ,உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர் ஆகியோரை  எளிதில் தாக்கும். நோய் வந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசிப்பதை விட அது வராமல் பாதுகாத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம், அந்த வகையில் என்று சிறுநீரகத்தை பலப்படுத்தக் கூடிய உணவுகளை பார்ப்போம்.

பூண்டு
தினமும் ஒரு பள்ளு  பூண்டை பச்சையாக சாப்பிட்டால் இதய நோய் வராமல் பாதுகாப்பதோடு கெட்ட கொழுப்பை கரைக்கும் ,சிறுநீரகக் குழாயில் ஏற்படும் தொற்றை குணப்படுத்தும்.

அடடே!தக்காளியை வைத்து இப்படி கூட செய்யலாமா?..

கொத்தமல்லி இலை
கொத்தமல்லியை கொதிக்க வைத்த தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் வீதம்  குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள டாக்சின்களை  வெளியேற்றி  கிட்னி ஆரோக்கியமாக இருக்கும். இதை வாரம் இரண்டு முறை செய்யலாம்.

திராட்சை
திராட்சையில் உள்ள விட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் மாரடைப்பை தடுக்கும், சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதையும் தடுக்கும்.

இஞ்சி
இதில் உள்ள ஆன்டி  ஆக்சிடென்ட் சிறுநீர் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மேலும் இது ரத்தம் மற்றும் சிறுநீரகத்தை சுத்திகரிக்கிறது , நல்ல ஜீரண சக்தியையும் கொடுக்கும்.

முட்டைகோஸ்

இதில் உள்ள வளமான ஊட்டச்சத்துக்கள் சிறுநீரக ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாகும். இதில் உள்ள பைட்டிக் ஆசிட் மற்றும் போலிக் ஆசிட் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடும். விட்டமின் கே மற்றும் விட்டமின் பி6 ,நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளது, இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.

மீன்கள்

மீன்களில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் அதிகம் உள்ளதால் சிறுநீரக நோய் வராமல் பாதுகாக்கும். சாலமன் மத்தி கானாங்கெளுத்தி சூரை மீன் போன்றவை மிக ஆரோக்கியமானது இதை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வரலாம்

வெங்காயம்

சின்ன வெங்காயத்தை அதிக அளவு நம் உணவில் எடுத்துக்கொண்டால் சிறுநீரக கற்கள் வருவதை தடுக்கலாம் மேலும் சிறுநீரகத்தை சுத்தமாகவும் வைத்துக்கொள்ளும். சின்ன வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

உணவில் உப்பை குறைத்துக் கொண்டால் சிறுநீரகப் பிரச்சனை ஏற்படாது மேலும் அதிக ஆக்சிலேட்  நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் தக்காளியில் அதிக ஆக்சிலேட் உள்ளது எனவே குறைவாக பயன்படுத்துவது சிறந்தது.மண்ணிற்கு கீழ் விளையும் கீரை வகைகளை அதிகம் எடுத்து கொள்ள கூடாது ,அதற்கு பதில் கொடிவகை காய்கறிகளான அவரைக்காய் போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்

ஆகவே இந்த உணவு முறைகளை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கோளாறு ஏற்படாமல் தப்பிக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்