செண்ட் அடிக்காமலே உங்க உடம்பு மண மணக்க இதோ சூப்பரான டிப்ஸ்..

Body odor

நம்மில் பலர் உடல் எப்போதும் வாசனையாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். அந்த வகையில் நாம் மார்க்கெட்டில் கிடைக்கக்கூடிய பல வாசனை திரவியங்களை பயன்படுத்துவோம். அதனால் ஏற்படும் பக்க விளைவுகளையும் கூடவே அனுபவிப்போம். ஏனென்றால் அந்த அளவுக்கு வாசனை திரவியங்கள் முக்கியத்துவம் பெறப்பட்டுள்ளது. பணி செய்யும் இடங்களிலும் பயணிக்கும் போதும் நம் மீது வேர்வை நாற்றம் அடித்தால் பலரும் நம்மை ஒரு மாதிரி பார்க்க தொடங்கி விடுவார்கள்,இனி  இந்த கவலையே  வேண்டாம் இந்த பதிவில் இயற்கையான முறையில் வாசனை பொடி தயார் செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

காய்ந்த பன்னீர் ரோஜா இதழ் பொடி= 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள்= 50 கிராம்
விரலி மஞ்சள்= 50 கிராம்
கோரைக்கிழங்கு= 50 கிராம்
கார்போக அரிசி= 50 கிராம்
செண்பக மொட்டு= 50 கிராம்
ஆவாரம்பூ பொடி= 50 கிராம்
முல்தானி மட்டி= 50 கிராம்

இவை நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

செய்முறை:

இவற்றை காய வைத்து பவுடராக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் கடலை மாவு சேர்த்து பயன்படுத்த வேண்டும். மேலே கூறப்பட்டுள்ளவற்றை அரைத்து எடுத்தால் எவ்வளவு அளவு வருகிறதோ அதிலிருந்து முக்கால் மடங்கு கடலை மாவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். உதாரணமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள பவுடர் 300 கிராம் என்றால் நாம் கடலை மாவு 200 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை ஒரு காற்று புகாத பாத்திரத்திலோ கண்ணாடி பாட்டிலிலோ சேகரித்து வைக்க வேண்டும். தேவைப்படும்போது எடுத்து உடலில் தேய்த்து குளித்து வரவேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களாவது பயன்படுத்த வேண்டும். முகத்தில் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் முகம் மிகவும் சாப்டான தோலை கொண்டுள்ளது. ஆகவே அதற்கென பல ஃபேஸ் மாஸ்க் உள்ளது அதை பயன்படுத்தவும்.

அடிக்கடி முகத்திற்கு வைட்டமின் ஈ மாத்திரைகளை பயன்படுத்துகிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

பயன்கள்:

இதில் நாம் சேர்த்துள்ள ரோஜா இதழ் பொடி உடலில் நல்ல வாசனையும் சருமம் மென்மையாக இருக்கவும் உதவும். இதில் சேர்க்கப்பட்டுள்ள மஞ்சள் கிருமி நாசினியாகவும் உடம்பில் தொற்று ஏற்படாமல் இருக்கவும் உதவுகிறது. கோரைக்கிழங்கு மற்றும் கார்போக அரிசி இறந்த செல்களை அகற்றுகிறது. முல்தானி மெட்டி உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். மேலும் செண்பக மொட்டு நல்ல வாசனையாக இருக்கும் இதில் சேர்க்கப்பட்டுள்ள ஆவாரம் பூ போடி சருமத்திற்கு நல்ல பளபளப்பை கொடுத்து புத்துணர்வை ஏற்படுத்தும்.

இவற்றைத்தான் நாம் நலங்கு பொடி என்று கூறுகிறோம். இந்த நலுங்குப்பொடி ஒவ்வொரு குடும்பத்திலும் வெவ்வேறு முறையிலும் தயார் செய்து பயன்படுத்துவோம். ஆகவே பாடி ஸ்ப்ரே போன்ற வாசனை திரவியங்களை பயன்படுத்துவதற்கு பதில் இந்த நலுங்கு மாவு பொடியை பயன்படுத்தி வந்தால் வேர்வை நாற்றம் ஏற்படுவதை தடுத்து சருமத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

IPL 2025 KKR vs srh
KKR vs SRH - IPL 2025 1st innings
Opposition leader Rahul Gandhi
CM MK Stalin speech CPIM Conference
TVK Leader Vijay
Watermelon - sathish kumar