Thumb Sucking [Imagesource : Representative]
குழ்நதைகள் செய்யக்கூடிய அனைத்து செய்கைகளுமே ரசிக்க கூடியதாக தான் இருக்கும். ஆனால் அவர்கள் செய்ய கூடிய சில செய்கைகள் பெற்றோரை யோசிக்க வைக்கும். அப்படிப்பட்ட செய்கைகளில் ஒன்று தான் கை சூப்பும் பழக்கம். குழந்தை கை சூப்புவது இயல்பான செய்கையா என பெற்றோருக்கு யோசனை ஏற்படும்.
குழந்தைகள் கை சூப்புவது குழந்தைகளிடம் இருக்க கூடிய இயல்பான விஷயம் தான். குழந்தைகளிடம் இந்த பழக்கம் பிறந்த பின்பு வருவதில்லை. அந்த குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, தங்களது கைகளை வாய்க்குள் வைக்கும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கம் குழந்தைகள் வயிற்றில் 8 மாதமாக இருக்கும் போதே இருக்கும். இது சாதாரணமாக விஷயம் தான்.
குழந்தை பிறந்து 3 மாதத்திற்கு பின் தொடர்ந்து தங்களது கைகளை சூப்ப தொடங்குவர். கட்டை விரல், இரண்டு விரல்கள் அல்லது கைகள் முழுவதையுமே வாயில் வைத்து சூப்புவார்கள். சில சமயங்களில் கைகள் முழுவதையுமே வாயில் வைத்து குழந்தைகள் வாந்தி கூட எடுத்திருப்பார்கள்.
குழந்தைகளிடம் விரல் சூப்பும் பழக்கம் இருந்தால், அவர்கள் மூளையின் செயல்பாடு சரியாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் மூளையில் ஏதேனும் பிரச்னை உள்ள குழந்தைகளிடம் கை சூப்பும் பழக்கம் இருக்காது. குழந்தைகள் கைசூப்பும் போது, அவர்களது மூளை அமைதலான நிலைக்கு வரும் போது அப்படியே தூங்கி விடுவார்கள். குழந்தைகள் தங்களை தாங்களே அமைதிப்படுத்திக் கொள்ள முயற்சிப்பது தான் கை சூப்பும் பழக்கம்.
பொதுவாக பெற்றோர்கள் கை சூப்புவதை நிறுத்த சூப்பி, மற்றும் சூப்பிக்குள் பழங்களை வைத்து சூப்ப கொடுப்பது என இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுவதுண்டு. இது மிகவியம் தவறான செயல். ஏனென்றால் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்துவது மிகவும் எளிது. ஆனால், சூப்பி பயன்படுத்தும் பழக்கத்தை நிறுத்துவது மிகவும் கடினம். அதே சமயம் சூப்பிகளை அடிக்கடி கொடுக்கும் போது, பற்கள் உள்ள குழந்தைகளுக்கு பல் சம்பந்தமான பிரச்னை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
கை சூப்பும் பழக்கக்கதை 2 வயது வரை அனுமதிக்கலாம். இந்த 2 வயது வரை குழந்தைகள் எப்போதெல்லாம் தாங்கள் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதாக உணர்கிறார்களோ, அதாவது தாய் அருகில் இல்லாத போது, பசி உணர்வு ஏற்படும் போது, தூக்கம் வரும் போது கை சூப்புகிறார்கள்.
2 வயதிற்கு மேல் குழந்தைகள் அதிகமாக கை சூப்புகிறார்கள் என்றால் அதனை தடுக்க வேண்டும். ஆனால், இதனை தடுக்க வேப்ப எண்ணெய் தடவுவார்கள். இது மிகவும் தவறானது. இது குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்ட வலிப்பு ஏற்படும் போது, அது மூளையை பாதிக்கும்.
பெரும்பாலான குழந்தைகள் 2 வயதிற்கு மேல் கை சூப்பும் பழக்கத்தை விட்டுவிடுவார்கள். அப்படி விடாத குழந்தைகளுக்கு, குழந்தைகளை ஊக்குவிக்கும் வண்ணம் பேச வேண்டும். அதாவது, நீ கை சூப்பாமல் இருந்தால் உனக்கு பிடித்த பொம்மையை வாங்கி தருவேன் என அவர்களிடம் கூற வேண்டும். அப்படி சொல்லும் போது அவர்கள் கை சூப்பாமல் இருக்க முயற்சிப்பார்கள்.
நாம் சொன்னதை கேட்டு குழந்தைகள் கை சூப்பாமல் இருக்கும் போது, அவர்களை பாராட்ட வேண்டும். அவர்கள் சூப்பும் கை விரலில் பேண்டேஜ், அல்லது கையுறை போட்டு விடலாம். அதே சமயம் குழந்தைகளை திட்டினாலோ, அடித்தாலோ அவர்கள் இந்த பழக்கத்தை மறைமுகமாக கடைபிடிப்பார்கள். குழந்தைகள் 2 முதல் இரண்டரை வயது வரை கை சூப்புவது பிரச்சனையில்லை, ஆனால் அந்த வயதையும் தாண்டி கை சூப்பும் போது மேற்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…