மூட்டு வலியில் இருந்து தப்பிக்க இந்த சூப் போதும்.!
முருங்கை தண்டு சூப் -சத்தான முருங்கைத்தண்டு சூப் செய்வது எப்படி என்று இப்பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
- முருங்கைக்கீரை =கால் கப்
- கீரையின் தண்டு= ஒரு கட்டு
- மிளகு= ஒரு ஸ்பூன்
- சீரகம்= ஒரு ஸ்பூன்
- இஞ்சி= ஒரு இன்ச் அளவு
- பூண்டு =6 பள்ளு
- சின்ன வெங்காயம்= 10
- மஞ்சள் தூள் =1/2 ஸ்பூன்
- பெருங்காயத்தூள்= கால் ஸ்பூன்
- நல்லெண்ணெய் =2 ஸ்பூன்
- தக்காளி= ஒன்று
செய்முறை:
முருங்கைத் தண்டுகளை ஓரளவுக்கு சிறிதாக நறுக்கி குக்கரில் சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் முருங்கை கீரையையும் சேர்த்துக் கொள்ளவும். இப்போது மிளகு, சீரகம் ஆகியவற்றை கொரகொரப்பாக இடித்து சேர்த்துக் கொள்ளவும். அதனுடன் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தையும் இடித்து சேர்த்துக் கொள்ளவும். இப்போது மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இஞ்சியையும் இடித்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும். தக்காளி ஒன்றை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். இப்போது அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பும் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்போது இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி குக்கரை ஏழிலிருந்து எட்டு விசில் வரை விட்டு இறக்கவும். இப்போது சத்தான எலும்புகளுக்கு வலுவூட்டும் முருங்கை தண்டு சூப் தயார்.