Mathi Fish : நம் எல்லாருக்கும் மத்தி மீன் அதாவது நமக்கெல்லாம் சாளை மீன் குழம்பு மிகவும் பிடிக்கும் அதற்கு கரணம் அந்த மீனின் சுவை தான். தமிழ் நாட்டிலும், நமக்கு அடுத்துள்ள கேரளத்திலும் இந்த மத்தி மீன் குழம்பை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் நம் ஊரை விட கேரளத்தில் இந்த மத்தி மீன் கறியை மிக காரத்துடன் வைப்பார்கள். தற்போது, கேரளாவில் செய்யும் அந்த காரமான மத்தி மீன் கறியை பற்றியும் அதன் பயன்களையும் பற்றியும் இதில் பார்க்கலாம்.
தேவையானவை :
நமக்கு தேவையான அளவிற்கு மத்தி மீனை எடுத்து அதை நன்கு கழுவ கொள்ள வேண்டும். மீன் வாங்கும் போதே அதை நாம் கவனமாக பெரிய அளவிலான மீன்களை வாங்க வேண்டும். அப்படி பெரிய மீனை வாங்கினால் அது சுவையில் நன்றாக இருக்கும். சிறிய வெங்காயம், கடுகு, சீரகம், வெந்தயம், மிளகாய் தூள், ஊற வைத்த புளி, நல்லெண்ணெய், பச்சை மிளகாய்.
செய்முறை :
முதலில், மிளகாய் பொடியை தண்ணீருடன் சேர்த்து உள்ளங்கை அளவிற்கு உருண்டை பிடித்து எடுத்த கொள்ள வேண்டும். பின் 100g புளியை அதன் பிறகு சிறுது நேரம் கழித்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதை சூடாக்கி கடுகு, கருவேப்பிலையை அதில் இடவேண்டும். அது நன்கு தாளிக்கும் நிலையில் வந்த உடன் உரித்து வைத்த சிறு வெங்காயத்தை அதில் வெட்டியோ அல்லது முழுவதுமாகவோ அதனுடன் இட்டு நன்கு வறுக்க வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கிய உடன் இரண்டு பச்சை மிளகாயை வெட்டி அதனுடன் சேர்த்து வதக்க வேண்டும். அதன் பிறகு ஊற வைத்த புளியை நன்கு பிசைந்து அதன் சாரை மட்டும் கடாயில் ஊற்ற வேண்டும். அது கொதி நிலைக்கி வந்த பிறகு உருண்டை பிடித்த மிளகாய் தூளை அதனுடன் இட்டு கிண்ட வேண்டும். பின்பு தேவையான அளவுக்கு தண்ணீர் மட்டும் உப்பு சேர்த்து கொதிக்கும் வரை அவ்வப்போது கிண்டி விட வேண்டும்.
பின் கொதிக்க துவங்கிய உடன் கழுவி வைத்திருக்கும் மத்தி மீனை அதனுடன் சேர்த்து 10 நிமிடம் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்க வேண்டும். அவ்வளவு தான் கொதித்தவுடன் இறக்கி வைத்தால் கேரளா மத்தி மீன் கறி ரெடி ..!
பயன்கள் :
100g மத்தி மீனில் புரத சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர் சத்து 66.70 கிராமும் உள்ளது. இந்த மத்தி மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமாக இருப்பதால் இதய நோய் ஏற்படும் வாய்ப்பை தடுக்கும். இதில் வைட்டமின் B12 இருப்பதால் பல்வேறு புற்று நோய் வரும் வாய்ப்பை தடுக்கிறது.
இந்த மத்தி மீனை சாப்பிட்டால் கண் பார்வையும் நன்றாக தெரியும். மேலும், மூளை நரம்பு சம்மந்த பட்ட நோய்கள், ஆஸ்த்துமா, மன அழுத்தம் போன்றவற்றை குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை கட்டுக்குள் வைத்து கொள்கிறது.
இந்த மத்தி மீனை இது போல செய்து வீட்டில் உள்ள அனைவர்க்கும் கொடுத்து பயன் அடையுங்கள் ..!
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…