அண்ணன் மீது பாசம் கொண்ட தங்கைகளுக்காக இந்த நாள் சமர்ப்பணம்!
அண்ணன் மீது பாசம் கொண்ட தங்கைகளுக்காக இந்த நாள் சமர்ப்பணம்.
அண்ணன் – தங்கை பாசம் என்பது இன்று பலராலும் போற்றப்படக் கூடிய, பிரிக்க முடியாத ஒரு உறவாகும். பெண்களை பொறுத்தவரையில், தங்களுக்கு ஒரு அண்ணன் இருந்தால், அவர்களது எதிர்காலத்தை குறித்த பயம் இல்லாமல் வாழ்வார்கள். ஏனென்றால், தன்னை எந்த இடத்திலும், தனது அண்ணன் தன்னை தள்ளாட விட மாட்டான் என்ற நம்பிக்கை தான்.
அந்தவகையில், அண்ணன் – தங்கை என்ற இந்த உன்னதமான உறவை போற்றும் வகையில், கடந்த வருடம் ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், இந்த வருடம் இந்த பண்டிகை ஆகஸ்ட் 3-ம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையின் சிறப்பு என்னவென்றால், பெண்கள் தங்களது சகோதரர்கள், மற்றும் சகோதரர்களாகக் கருதுவோரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது ஆகும்.
தனது சகோதரரின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் காட்டியவுடன், ஒரு, ஆண், அந்தச் சகோதரியின் பாதுகாப்பிற்கும், வாழ்க்கை நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. இந்த பண்டிகையை இந்து மதத்தினர் தான் கொண்டாடுவதாக கருதினாலும், இன்று இந்த பண்டிகை அணைத்து மதத்தினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.