உங்க முக அழகை மெருகூட்ட இது மட்டும் போதும்! ட்ரை பண்ணி பாருங்க!
முக அழகை மெருகூட்ட எலுமிச்சைசாறு மற்றும் தேன் போதுமானது. இயற்கை முறையில், உங்களது முக அழகை மெருகூட்ட இதை செய்து பாருங்க.
இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் தங்களது முக அழகை மெருகூட்ட பல வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். அதிலும் அதிகமானோர் அதிக பணத்தை செலவு செய்து, கேம்மிக்கல் கலந்த செயற்கையான அழகு சாதன பொருட்களை தான் உபயோகிக்கின்றனர்.
இவ்வாறு பயன்படுத்தும் போது பல பக்கவிளைவுகள் ஏற்படக் கூடும், இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபட, இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவது தான் சிறந்தது. தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், நமது அழகை மெருகூட்ட என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- எலுமிச்சை சாறு
- தேன்
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பௌலில், எலுமிச்சை சாறு மற்றும் தேனை சம அளவில் கலந்து கொள்ள வேண்டும். பின் அதனை முகத்தில் தடவ வேண்டும்.
15 நிமிடங்கள் கழித்து, முகத்தை வெந்நீரால் கழுவ வேண்டும். இப்படி வார இருமுறை செய்து வந்தால், முகம் பளபளப்பாக மாறி விடும்.