இந்த மூன்று பொருட்கள் போதும்…சளி, இருமல், காய்ச்சலுக்கு குட்பைதான்!

Fever

மழை மற்றும் குளிர்காலம் வந்து விட்டாலே பலவித காய்ச்சல்கள் மற்றும் சளி இருமல் போன்றவை சேர்ந்தே வந்து விடும். நம்மில் பல ஒரு தும்மல் வந்து விட்டாலே போதும் உடனே மாத்திரையை எடுக்க ஆரம்பித்து விடுவோம் இது தவறான அணுகுமுறையாகும். சிறு சிறு தொந்தரவிற்காக தொட்டதுக்கெல்லாம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வது நமக்கு பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இன்று நாம் காய்ச்சல் மற்றும் சளி வந்து விட்டால் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து கசாயமாக குடித்தும் சரி பண்ணலாம்.

சளிக்கு வைத்தியம் செய்தால் ஒரு வாரத்தில் குணமாகும். வைத்தியம் செய்யாவிட்டால் ஏழு நாளில் குணமாகும் என்பது முதியோர் மொழியாகும்.

ஆமாங்க பொதுவா சளி பிடித்தாலே சரி ஆவதற்கு நம் உடல் ஏழு நாட்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து உட்கொண்டால் ஐந்து நாட்களில் குணமாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நேரங்களில் உடம்புக்கு ஓய்வு கொடுப்பது மிகவும் அவசியமானதாகும்.

தேவையான பொருட்கள் :

துளசி = சிறிதளவு
மிளகு=3
பட்டை தூள் = இரண்டு மிளகு அளவு
தேன்=1ஸ்பூன்

செய்முறை:

துளசி இலைகள் மற்றும் மிளகையும் சேர்த்து இடித்து அரை லிட்டர் தண்ணீரில் கால் லிட்டர் ஆகும் வரை கொதிக்க வைத்து அதில் பட்டை தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். பிறகு வெதுவெதுப்பான சூடு வந்த பிறகு வடிகட்டி அதனுடன் தேன் சேர்த்து காலை மாலை உணவுக்குப் பின் 150 ml குடிக்கவும். பத்து வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு 15 ml மட்டும் கொடுக்கவும்.தொடர்ந்து மூன்று நாட்கள் எடுத்து வந்தால் சளி இருமல் காய்ச்சல் மற்றும் அதனால் ஏற்படும் உடல் வலியும் குணமாகும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் வெற்றிலை 1 கற்பூரவள்ளி இலை 3,மிளகு 3, மஞ்சள் தூள் கால் ஸ்பூனுக்கும் குறைவாக,சீரகம் அரை ஸ்பூன் சேர்த்து அரை டம்ளர் வரும் வரைமிதமான தீயில்  கொதிக்க விடவும் .பின்பு அதை மிதமான சூடாகும் வரை வைத்து வெறும் வயிற்றில் காலை மாலை அரை கிளாஸ் அளவு குடித்து வந்தால் தலை பாரத்துடன் கூடிய சளி இருமல் சரியாகும் அதாவது ஜலதோஷம் குணமாகும்.இரண்டு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு10ml கொடுக்கலாம். அவ்வாறும் குணமாகவில்லை என்றால் மருத்துவரை அணுகவும்.

துளசி இலைகளுக்கு சளி கோழைகளை அகற்றக் கூடிய தன்மை உடையது. இதற்கு காய்ச்சலை தடுக்கக்கூடிய சக்தியும் உண்டு.

மிளகு சுவாசம் மண்டலத்தில் தேங்கியுள்ள சளியை கரைக்கும். மேலும் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருப்பதில் இருந்து விடுதலை கொடுக்கும். குறிப்பாக இருமலை குறைத்து விடும்.

வெற்றிலை தலைவலிக்கு ஒரு சிறந்த நிவாரணி ஆகும். சளி இருக்கும் போது தலைபாரம் தலைவலி மேலும் கண் கலங்குவதைப் போன்று இருக்கும் இவற்றை எல்லாம் குணப்படுத்தக்கூடிய சக்தி வெற்றிலைக்கு உண்டு.

ஆகவே சளி இருமலுக்கு வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை பயன்படுத்தி குணப்படுத்துவோம். முடிந்தவரை மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்