இந்த 5 பொருட்கள் இருந்தா போதுங்க..! அசத்தலான அல்வா ரெடி..!
அல்வா என்பது நம் அனைவருக்குமே பிடித்தமான ஒன்று தான். அல்வாவை நாம் எங்கு பார்த்தாலும் வாங்கி சாப்பிட தோன்றும். இதானால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அல்வாவை கடைகளில் தான் வாங்கி சாப்பிடுகிறோம்.
ஆனால், நாம் கடைகளில் வாங்கி சாப்பிடுவதை விட வீட்டிலேயே செய்து சாப்பிடுவது தான் நமது உடலுக்கு நல்லது. அது மட்டுமல்லாமல், சுகாதாரமான முறையிலும் செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் ராகி மாவை வைத்து எப்படி அல்வா செய்வது என்று பார்ப்போம் .
ராகியில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கக்கூடிய பல வகையான நன்மைகள் உள்ளது. இதில் கால்சியம், இரும்புசத்து, வைட்டமின் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த மாவில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது. உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சிறந்த உணவாகும்.
தேவையானவை
- ராகி மாவு – அரை கப்
- நெய் – தேவையான அளவு
- நாட்டு சர்க்கரை – 2 ஸ்பூன்
- முந்திரி பருப்பு – 6
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் ஊற்றி, ராகி மாவை போட்டு 5 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இதில் ஒன்றரை கப் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கிளறி விட வேண்டும்.
ராகி மாவு நன்கு வெந்து கெட்டியாக வரும். பின் அதில் சிறிதளவு உப்பு சேர்த்து, 2 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். பின் 1 ஸ்பூன் நெய்யில் முந்திரி போட்டு தனியாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை நாம் செய்து வைத்துள்ள ராகி அல்வாவில் போட்டு கிளறி விட வேண்டும். இப்பொது சுவையான ராகி அல்வா தயார்.