நம்மில் பல உணவு விரும்பிகள் இரவு தூங்குவதற்கு முன்பு கூட நமக்கு பிடித்த பல உணவுகளை சாப்பிட்டுவிட்டு தூங்குகிறோம். ஆனால், அதில் சிலவற்றை நாம் இரவில் சாப்பிட்டுவிட்டு தூங்குவதால் பல பிரச்சனைகளை ஏற்படுத்திக்கிறது. இதனால் நம்மளுடைய தூக்கமும் தடைபடுகிறது.
ஒரு நல்ல இரவு தூக்கம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அடித்தளமாகும். தூக்கம் நம் மூளையையும் உடலையும் புத்துணர்ச்சியை கொடுக்கிறது. நமது அமைப்பு ஓய்வெடுக்கும்போது, அது குணமடைந்து வலுவடைகிறது. தூக்கமின்மை தலைவலி முதல் இதய நோய் வரை பல்வேறு பிரச்சனைகளுடன் தொடர்புடையது.
சில உணவுகள் மற்றும் பானங்கள் நாம் இரவு நேரம் தூங்குவதற்கு முன்பு குடிப்பதால் நம்மளுடைய தூக்கத்தை கெடுகிறது. சில நேரங்களில், இந்த சிக்கலை நாம் உணராமல் மற்ற காரணங்களுக்காக நமக்கு தூக்கம் வரவில்லை குறை கூறுகிறோம். இந்நிலையில், தூங்கும் முன் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது என 5 உணவுகள் உள்ளது. அது என்னென்னவென்று நாம் பார்க்கலாம்.
1. ஐஸ் கிரீம்
கோடை காலம் தொடங்கிவிட்டது எனவே, பலரும் மதியான நேரத்தை தாண்டி இரவு நேரமும் ஐஸ்கிரீம்களை சாப்பிட்டு வருகிறோம். துரதிர்ஷ்டவசமாக, இரவு உணவிற்குப் பிறகு அல்லது நள்ளிரவில் ஒரு கிண்ணம் ஐஸ்கிரீம் சாப்பிடக்கூடாது. ஐஸ்கிரீமில் கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகமாக உள்ளது. இவை இரண்டும் உங்கள் தூக்கத்திற்கு தடையாக அமையும்.
நிறைய கொழுப்புகளைக் கொண்ட உணவுகள் உங்களுடைய துக்கத்தை கெடுத்து விழித்திருக்க வைக்கும். ஏனென்றால், உங்கள் உடலுக்கு அதை சரியாக ஜீரணிக்க அதிக நேரம் தேவைப்படுகிறது. அதிக சர்க்கரை உள்ள உணவுகள் தூக்கமின்மையுடன் தொடர்புடையவை. அவை இன்சுலின் அளவையும் பாதிக்கின்றன, இது உங்களுடைய நல்ல தூக்கத்திற்கு தொந்தரவு கொடுக்கும்.
2.சாக்லேட்
சாக்லேட் என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஆனால், அதனை இரவு நேரங்களில் நீங்கள் சாப்பிடுவதை தவிர்த்தே ஆக வேண்டும். டார்க் சாக்லேட்டில் தியோப்ரோமைன் உள்ளது, இது இதயத் துடிப்பை அதிகரிக்கும். இதுவும் உங்களுடைய தூக்கத்தை கெடுக்கும்.
மேலும், பேக்கேஜ் செய்யப்பட்ட சாக்லேட்டுகளிலும் சர்க்கரை அதிகம். எனவே, இதுபோன்ற பொருட்கள் உங்கள் உடலை அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தலாம். சாக்லேட் இரவு நேரத்தில் சாப்பிடுவதால் நல்ல இரவு தூக்கத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம். சாக்லேட் சாப்பிட கூடாது என்றால் நாங்கள் என்ன சாப்பிட வேண்டும்? என்று உங்கள் மனதிற்குள் ஒரு கேள்வி எழும்புவது எங்களுக்கு தெரிகிறது. அவர்களுக்கு பாதாம் ஒரு சிறந்த வழி. அவற்றின் மெலடோனின் உள்ளடக்கம் உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தும், இதனால் நீங்கள் தூங்குவதற்கு உதவுகிறது.
3. பிரட்
சாக்லேட் போலவே பிரட்டையும் பலரும் விரும்பி சாப்பிடுவது உண்டு. இதில் நிறைய சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன மற்றும் அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இத்தகைய உணவுகள் தூக்கமின்மைக்கு அதிக ஆபத்துகளை விளைவிக்கிறது என ஆராய்ச்சி சொல்கிறது.
இரவு நேரங்களில் பிரட் சாப்பிடுவது நம்மளுடைய இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கச் செய்கின்றன. இது நிம்மதியாக உறங்கும் உங்கள் திறனை பாதிக்கலாம். அதைபோல் இது உடல் எடையை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளையும் ஏற்படுத்தலாம். எனவே தூங்குவதற்கு முன்பு பிரட் சாப்பிடவே சாப்பிடாதீர்கள்.
4.தக்காளி
தக்காளி 2 காரணங்களுக்காக நம்மளுடைய தூக்கத்தைத் தடுக்கிறது. அதில் முதல் காரணம் என்னவென்றால், தக்காளியில் டைரமைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது நமது மூளையின் செயல்பாட்டைத் தூண்டுகிறது மற்றும் தூக்கம் வருவதை தடுத்து நம்மளை விழித்திருக்க வைத்திருக்கும்.
மற்றோரு காரணம் என்னவென்றால், தக்காளி அதிக அளவு அமிலத்தன்மை கொண்டது. தூங்குவதற்கு முன்பு அவற்றை சாப்பிடுவதை அஜீரணம் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்தும் எனவே இனிமேல் தூங்குவதற்கு முன்பு தக்காளி சாப்பிடுபவர்களாக நீங்கள் இருந்தால் அதனை விட்டுவிடுங்கள்.
5.காரமான உணவுகள்
இப்போது கோடை காலம் தொடங்கி வெயில் கொளுத்தி வருகிறது. எனவே, நமது உடலில் ஏற்கனவே வெப்பநிலை அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் இரவில் தூங்கும் போது காரமான உணவுகள் சாப்பிடுவதால் உடல் வெப்பநிலையை அதிகரிக்க வழிவகுக்கும், இது தூக்கத்தை பாதிக்கும். சில காரமான உணவுகள் அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் பிற குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
அதைபோலவே, நீங்கள் தூங்குவதற்கு முன்பு பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இத்தகைய உணவுகள் உங்கள் வயிற்றுக்கு நல்லது இந்த உணவுகள் உங்கள் இரவை மட்டுமல்ல, காலையையும் பாதிக்கலாம். இரவில் இப்படி காரமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நெஞ்செரிச்சல் உணர்வுகள் ஏற்பட்டு நீங்கள் எழுந்திருக்கலாம். இதனால் உங்கள் தூக்கமும் பாதிக்கப்படலாம். எனவே, இனிமேல் இரவில் தூங்குவதற்கு முன்பு காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள்.
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…