தாய்மையின் அடையாளம்தாய்ப்பால்! இன்று உலக தாய்ப்பால் வாரம்!

Published by
லீனா

பெண் எனும் வார்த்தையை நாம் கேள்விப்பட்டதும் நமது நினைவுக்கு ஓடி வருவது “தாய்மை” தான். பிறந்த குழந்தைக்கு தாய் அளிக்கும் முதல் உணவாகிய தாய் பாலின் மகத்துவதை புரிய வைக்க தான் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரம் “தாய் பால்” வாரமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த தாய் பால் வாரம் 1992 ஆம் ஆண்டு, ‘வேர்ல்டு அலையன்ஸ் பிரெஸ்ட் ஃ பீடிங் ஆக்க்ஷன்’ எனும் அமைப்பால் நடைமுறைக்குக்கொண்டு வரப்பட்டது. இந்த வரத்தை உலக சுகாதார அமைப்பு மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு சங்கம் ஆகியவை பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வு பேரணி மூலம் உலகறியச்செய்கிறது.

தாய் பாலின் மகத்துவத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் ஊக்குவிக்க நடைபெறும் இவ்வளவு மேன்மையான தாய் பாலில் உள்ள சுவாரஸ்யமான ஆரோக்கியம் மற்றும் தாய் பாலை குறித்த மூடநம்பிக்கைகளையும் நாம் கீழே பாப்போம்:

தாய் பாலின் முக்கியத்துவம்

குழந்தை பிறந்தவுடன் வெளியாகும் தாய் பால் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்தபாலினால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. குழந்தை பிறந்தவுடன் ஆரோக்கியமான பெண்ணின் உடலில் 850 மிலி பால் சுரக்கும். தாய் பால் கொடுப்பதால், பெண்ணின் உடலில் கூடுதலாக 600 கலோரிகள் செலவழியும், இதனால், தான் நன்றாக சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்று செல்கிறார்கள்.

குழந்தைக்கு குறைந்தபட்சம் 6 மாதங்களாவது தாய் பால் கொடுக்கவேண்டியது அவசியம். இதனால் குழந்தையின் நுண்ணறிவு வளர்ச்சியடைவதோடு மட்டும் அல்லாமல், குழந்தைக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியையும் அள்ளித்தரும் சக்தி படைத்தது இந்த தாய் பால்.

தாய் பாலை குறித்த மூடநம்பிக்கைகள்

தாய் பாலின் அளவு, மார்பகத்திலுள்ள திசுக்களின் எண்ணிக்கையும், அந்தத்திசு தூண்டப்படும் விதத்தையும் பொறுத்தே அமையும். நம் குழந்தைக்கு நன்றாக தாய் பால் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட பாலின் சுரப்புக்கு காரணமாகிறதாம்.

மேலும், தாய் பால் கொடுப்பதால் பெண்களின் அழகு குறையும் என கூறுவது மிக பெரிய மூடநம்பிக்கை. அதுமட்டும் அல்லாமல், தாய் பால் கொடுப்பவர்களுக்கு புற்று நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகளே மிக குறைவு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த மகத்துவமிக்க மற்றும் விலை மதிப்பிலாத தாய் பாலின் மேன்மையை அறியவே வருடம் தோறும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய் பால் வாரமாக கடைபிடிக்கப்டுகிறது.

 

 

Published by
லீனா

Recent Posts

அதானி விவகாரம், அமித்ஷா பேச்சு, தற்போது வேறு பிரச்சனை! – ராகுல் காந்தி கடும் குற்றசாட்டு!

டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…

1 hour ago

ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!

ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…

3 hours ago

விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!

சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…

3 hours ago

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

6 hours ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

6 hours ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

6 hours ago