தாய்மையின் அடையாளம்தாய்ப்பால்! இன்று உலக தாய்ப்பால் வாரம்!
பெண் எனும் வார்த்தையை நாம் கேள்விப்பட்டதும் நமது நினைவுக்கு ஓடி வருவது “தாய்மை” தான். பிறந்த குழந்தைக்கு தாய் அளிக்கும் முதல் உணவாகிய தாய் பாலின் மகத்துவதை புரிய வைக்க தான் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் வாரம் “தாய் பால்” வாரமாக உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
இந்த தாய் பால் வாரம் 1992 ஆம் ஆண்டு, ‘வேர்ல்டு அலையன்ஸ் பிரெஸ்ட் ஃ பீடிங் ஆக்க்ஷன்’ எனும் அமைப்பால் நடைமுறைக்குக்கொண்டு வரப்பட்டது. இந்த வரத்தை உலக சுகாதார அமைப்பு மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு சங்கம் ஆகியவை பிரச்சாரங்கள் மற்றும் விழிப்புணர்வு பேரணி மூலம் உலகறியச்செய்கிறது.
தாய் பாலின் மகத்துவத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் ஊக்குவிக்க நடைபெறும் இவ்வளவு மேன்மையான தாய் பாலில் உள்ள சுவாரஸ்யமான ஆரோக்கியம் மற்றும் தாய் பாலை குறித்த மூடநம்பிக்கைகளையும் நாம் கீழே பாப்போம்:
தாய் பாலின் முக்கியத்துவம்
குழந்தை பிறந்தவுடன் வெளியாகும் தாய் பால் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இந்தபாலினால் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. குழந்தை பிறந்தவுடன் ஆரோக்கியமான பெண்ணின் உடலில் 850 மிலி பால் சுரக்கும். தாய் பால் கொடுப்பதால், பெண்ணின் உடலில் கூடுதலாக 600 கலோரிகள் செலவழியும், இதனால், தான் நன்றாக சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்று செல்கிறார்கள்.
குழந்தைக்கு குறைந்தபட்சம் 6 மாதங்களாவது தாய் பால் கொடுக்கவேண்டியது அவசியம். இதனால் குழந்தையின் நுண்ணறிவு வளர்ச்சியடைவதோடு மட்டும் அல்லாமல், குழந்தைக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியையும் அள்ளித்தரும் சக்தி படைத்தது இந்த தாய் பால்.
தாய் பாலை குறித்த மூடநம்பிக்கைகள்
தாய் பாலின் அளவு, மார்பகத்திலுள்ள திசுக்களின் எண்ணிக்கையும், அந்தத்திசு தூண்டப்படும் விதத்தையும் பொறுத்தே அமையும். நம் குழந்தைக்கு நன்றாக தாய் பால் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் கூட பாலின் சுரப்புக்கு காரணமாகிறதாம்.
மேலும், தாய் பால் கொடுப்பதால் பெண்களின் அழகு குறையும் என கூறுவது மிக பெரிய மூடநம்பிக்கை. அதுமட்டும் அல்லாமல், தாய் பால் கொடுப்பவர்களுக்கு புற்று நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகளே மிக குறைவு என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்த மகத்துவமிக்க மற்றும் விலை மதிப்பிலாத தாய் பாலின் மேன்மையை அறியவே வருடம் தோறும் ஆகஸ்ட் முதல் வாரம் தாய் பால் வாரமாக கடைபிடிக்கப்டுகிறது.