வந்தாச்சு மழைக்காலம்.. என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்.? சாப்பிடக் கூடாது.?

மழைக் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றியும், சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றியும் மருத்துவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.

Rain season food (1)

மழைக் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றியும், சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றியும் மருத்துவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.

சென்னை : பருவ காலங்களுக்கு ஏற்றவாறு நம் உணவு முறையில் சிறிய மாற்றங்கள் கொண்டு வந்தால் பல்வேறு நோய் தொற்றுக்களில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். அப்படி, தற்போது நிலவும் மழைக்காலத்தில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகளைப் பற்றி இந்த செய்திக் குறிப்பில் தெரிந்து கொள்ளலாம்.

மழைக்காலம் பெரும்பாலானோர்க்கு கொண்டாட்டமாக இருந்தாலும் ஆஸ்துமா சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு மழைக்காலம் தொந்தரவாகவே இருக்கும் .மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எந்த பருவநிலையாக இருந்தாலும் உணவில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மழைக்காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் :

மழைக்காலத்தில் பழங்கள் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடைகிறது .குறிப்பாக ஆப்பிள் மற்றும் சிட்ரஸ் பல வகைகளான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இதில் அதிக அளவு வைட்டமின் சி சத்து ஆன்டி ஆக்சிடென்ட் நீர் சத்து போன்றவை அடங்கியுள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. சிட்ரஸ் பழ ஒவ்வாமை (அலர்ஜி) உள்ளவர்கள் அதனை தவிர்த்துக் கொள்வது நல்லது.

மாதுளம் பழம் தினமும் ஒன்று எடுத்துக் கொள்வதன் மூலம் வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. இது உடலில் வீக்கம், அலர்ஜி, போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. மழைக்காலத்தில் பப்பாளி எடுத்துக் கொள்வதால் அதில் உள்ள பப்பைன் என்ற வேதிப்பொருள் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் வாயு பிரச்சனையை குணப்படுத்துகிறது.

பலரும் மழைக்காலத்தில் தயிர் சாப்பிடலாமா கூடாதா என யோசிப்பார்கள்.. தயிர் பாலை விட சிறந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர். தயிரில் ப்ரோ பயோடிக் பாக்டீரியா இருப்பதால் மழைக்காலத்தில் எடுத்துக் கொள்வது நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது என மருத்துவர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.

மேலும், சுண்டைக்காய், பாவக்காய் , இஞ்சி பூண்டு போன்றவை மழைக்காலங்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கிய உணவுப் பொருள்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மழைக்காலத்தில் காய்கறிகளை பச்சையாக எடுத்துக் கொள்வதை காட்டிலும், அதனை வேகவைத்து சூப்பாக எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் :

மழைக்காலத்தில் சாலையோர கடைகளில் சாப்பிடுவதை தவிர்பது நல்லது . ஏனெனில், இந்த மழைக்கால சூழலில் காரணமாக தண்ணீர் மூலம் பரவும் நோய்கள் ஏராளம் உள்ளது.இதனால் உணவு அலர்ஜி ஏற்பட்டு செரிமான கோளாறுகளும் ஏற்படும் சூழல் உள்ளது. மேலும், குளிர்பானங்கள் மற்றும் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட தண்ணீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் தொண்டை வலி, கரகரப்பு, சளி, தலைவலி போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்