மஞ்சனத்தி மரத்தில் மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை : நுணா மரமானது மஞ்சள் நிறத்தில் இருப்பதாலும் அதனை வெட்டினால் மஞ்சள் நிற பால் வருவதாலும் மஞ்சனத்தி என பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இதன் இலைகள் கூர்மையாகவும், பூக்கள் வெள்ளை நிறத்திலும், அதன் காய்கள் மனித மூளை வடிவிலும் அமைந்துள்ளது.
தலை பாரம் ;
மழை மற்றும் பனிக்காலத்தில் ஏற்படும் சளி, காய்ச்சல், உடல் வலி போன்றவற்றிற்கு இதன் இலைகளை பறித்து கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குளித்து வர உடல் சுறுசுறுப்படையும். தலை பாரமும் குறையும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒற்றை தலைவலி ;
ஒற்றைத் தலைவலி நீங்க கடுகு எண்ணெய் 50 மில்லி, நல்லெண்ணெய் 50 மில்லி, புங்க எண்ணெய் 50 மில்லி இவற்றைக் கலந்து அதனுடன் ஒரு கைப்பிடி மஞ்சனத்தி பூக்களை சேர்த்து ஒரு கண்ணாடி பாட்டில் சேகரித்து ஒரு துணியால் மூடி விட வேண்டும். இதனை சூரிய ஒளி படாமல் 7 நாட்கள் வைக்க வேண்டும். ஏழு நாட்கள் பிறகு அந்த எண்ணையை எடுத்து உச்சந்தலை, புருவ நுனி பகுதி மற்றும் நெற்றிப்பொட்டு பகுதிகளில் தடவி வந்தால் ஒற்றை தலைவலி நீங்கும் என ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படுகிறது.
புற்று நோய் ;
மஞ்சனத்தின் மரத்தின் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுவதாகவும் புற்றுநோய் வருவது தடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. தற்போது மார்க்கெட்டுகளில் கிடைக்கும் நோனி ஜூஸ் இதிலிருந்து தயாரிக்கப்படுவதாகவும் இதன் விலை மிக உயர்ந்ததாகவும் உள்ளது. இந்த நோனி ஜூஸ் புற்றுநோய் செல்களை அழிக்க மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என சில ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன.
சரியான வயதில் ஒரு பெண் பருவமடையவில்லை என்றால் இந்த மஞ்சனத்தி பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டு வர விரைவில் அப்பிரச்சனை சரியாகும் என ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்படுகின்றது.
மஞ்சனத்தின் மரத்தின் பயன்கள் :
ஆங்கிலேயர் காலத்தில் கப்பல் கட்டுவதற்கு நுணா மரம் என்று சொல்லக்கூடிய மஞ்சனத்தி மரம் தான் பயன்படுத்தப்பட்டது என சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்த மரம் தண்ணீரில் எளிதில் மிதப்பதோடு மிக வலிமையானதாகவும் உள்ளது. மேலும், கடலில் உப்பு நீரை தாங்கும் தன்மை கொண்டதாகவும் கூறப்படுகிறது.
மாடுகளுக்கு கட்டப்படும் முகத்தடை என்று சொல்லக்கூடிய மாடுகள் பாரம் இழுக்க அதன் கழுத்தின் மீது கட்டப்படும் கட்டைகளாக மஞ்சனத்தி மரம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், மற்ற மரக்கட்டைகளை விட எடை குறைவாகவும் வலிமையாகவும் இருப்பதே இதன் முக்கிய பயனாக உள்ளது.
மேலும், மஞ்சனத்தி மரக்கட்டைகளால் செய்யப்படும் கட்டில்களில் உறங்கினால் ஆழ்ந்த உறக்கம் கிடைப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மண்வெட்டி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரக்கட்டைகளில் குவினைன் என்ற வேதிப்பொருள் இருப்பதால் இதிலிருந்து எண்ணெயும் தயாரிக்கபடுகிறது. இந்த எண்ணெய் நாள்பட்ட சர்க்கரை வியாதி புண்களை ஆற்ற பயன்படுகிறது என்றும் ஆயுர்வேத மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன.