அடடே! சாக்லேட் சாப்பிட்டால் மன அழுத்தம் குறையுமா…! இது நல்லா இருக்கே …!

chocolate benefits

இந்த உலகம் இருக்கும் காலம் வரைக்கும் அனைவருக்குமே ஒரு பொருள் பிடிக்கும் என்றால் அது நிச்சயம் சாக்லேட்டாக தான் இருக்க முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்புவது சாக்லேட் தான். குழந்தை பிறந்தால் சாக்லேட் …ஸ்கூலுக்கு போனால் சாக்லேட் ஏதேனும் சுப காரியங்கள் நடந்தால் முதலில் இருப்பது சாக்லேட்டாக தான் இருக்கும் ஸ்வீட்களை விட அதிகமாக சாக்லேட் தான் பயன்படுத்துகிறோம்.

ஆகவே அதன் இனிப்பு சுவைக்கு ஏற்ப பல இனிப்பு விஷயங்களையும் கொண்டுள்ளது அது என்ன என்று இந்த பதிவில் பார்ப்போம்.

இதயம்
சாக்லேட் சாப்பிட்டால் இதய நோய் ஏற்படுவது 10% குறைக்கப்படும். குறிப்பாக டார்க்  சாக்லேட் மாரடைப்பு ஏற்படுவதை 50% குறைக்கிறது என பல ஆய்வுகளில் கூறப்படுகிறது. எனவே தினமும் ஒரு துண்டுகள் மட்டும் சாக்லேட் எடுத்துக் கொள்வது நல்லது. நம் உணவில் ஒவ்வொரு நாளும் அறுசுவைகளுமே இருக்க வேண்டும் எந்த ஒரு சுவையையும் ஒதுக்க கூடாது இதுவே சரி விகித உணவாகும்.

ரத்த அழுத்தம்

சாக்லேட் சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தம் குறைக்கப்படுகிறது மேலும் உடலில் ஹார்மோன் அளவை மிகச் சரியான அளவில் வைத்துக் கொள்கிறது. கொக்கோ பவுடரில் இருந்து தான் இந்த சாக்லேட் தயாரிக்கப்படுகிறது. இது கெட்ட கொழுப்பை குறைவாக கொண்டுள்ளது. நம் சாக்லேட் வாங்கும் போது 60% கொக்கோ சேர்க்கப்பட்டுள்ளதா என அறிந்து வாங்க வேண்டும்.

மனநிலை மேம்பாடு

மன அழுத்தம் இருக்கும் போது ஒரு துண்டுகள் சாக்லேட் எடுத்துக் கொண்டால் மன அழுத்தம் குறைக்கப்படுகிறது அதற்காகத்தான் ஸ்வீட்  எடு கொண்டாடு என நம் மக்கள் சொல்கிறார்களோ என்னவோ.. அது உண்மைதான் .மேலும் இரண்டு – மூன்று மணி நேரத்திற்கு மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். குறிப்பாக பக்கவாதம் ஏற்படுவது 17 % குறைக்கப்படுகிறது.

குழந்தைகளுக்கு கொடுக்கும் முறை

குழந்தை பருவத்தையும் சாக்லேட்டையும் பிரிக்கவே முடியாது ஆனால் அதற்கு அடிமையாகி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு துண்டு சாக்லேட் சாப்பிடுவதில் தவறில்லை, பிறகு வாய் கொப்பளித்து விட வேண்டும் இல்லையென்றால் பல் சொத்தை ஏற்படும் அளவுக்கு அதிகமாக குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் உருவாகி அது பல்வேறு தொந்தரவுகளை ஏற்படுத்தும் எனவே அளவோடு கொடுப்பது சிறந்தது.

அட நெல்லிக்காயில் துவையல் செய்யலாமா..? அது எப்படிங்க..?

உடல் எடை அதிகரிப்பு 

உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் சாக்லேட் தினமும் எடுத்துக் கொள்ளலாம். சாக்லேட்டில் மூன்று வகை உள்ளது டார்க்  சாக்லேட், ஒயிட் சாக்லேட் ,மில்க் சாக்லேட் என உள்ளது. இதில் டார்க்  சாக்லேட்டில் தான் அதிக சத்துக்கள் கொக்கோவும்  உள்ளது .சாக்லேட் சாப்பிடுவதால் ஒரு கப் காபி மற்றும் கிரீன் டீ குடித்ததற்கு சமம் எனக் கூட சொல்லலாம். நம் மூளையை அந்த அளவுக்கு சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.

சாக்லேட் சாப்பிடாதவர்களை விட சாப்பிட்டவர்கள் சுமார் ஒரு வருடம் அதிகமாக உயிர் வாழ்ந்துள்ளனர் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 8 % அகால மரணத்தை குறைகிறது. எனவே நாம் அளவோடு பயன்படுத்தி நம் ஒவ்வொரு கொண்டாட்டத்திலும் இந்த சாக்லேட்டை ஒரு துண்டாக மட்டுமே எடுத்துக் கொள்வோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்