tamarind add Kuzhambu [File Image]
அறுசுவைகளில் ஒன்றானது இந்த புளிப்பு சுவை. புளி என்ற பெயரை கேட்டாலே நம் நாவில் எச்சில் ஊறும் அதுவே அதன் தனித்துவமாகும். இந்தியாவின் பேரிச்சம்பழம் என்று கூட ஒரு சிலர் கூறுகின்றனர் . நம் சமையலில் புளியை பல வகைகளில் பயன்படுத்துகிறோம் புளி குழம்பு, புளி ரசம் ,புளி சாதம் என பல வகைகளில் உணவே சேர்த்துக் கொள்கிறோம். அதன் பயன்களையும் சற்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா..
பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமா அப்போ இந்த பதிவை படிங்க..
புளி இல்லாத மீன் குழம்பு, காரக்குழம்பு கிடையாது .புளியை சேர்த்து சமைக்கும் உணவு எளிதில் கெட்டுப்போவதில்லை ஆக இந்த புளி நம் சமையலில் மிகவும் தொடர்புடையதாக உள்ளது. ஏன் கோவில்களில் கூட பானகம் என்று சொல்லப்படும் புளி கரைசையில் சர்க்கரை கலந்த பானம் கொடுப்பார்கள்.
விட்டமின் பிசத்துக்கள், டார்ட்டாரிக் ஆசிட், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் பாஸ்பரஸ் ,அயன் மற்றும்பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் நிறைந்துள்ளது.
100 கிராம் புளியில் கால்சியம் 7 சதவீதம், பாஸ்பரஸ் 11 சதவீதம், காப்பர் மற்றும் விட்டமின் பீ சத்து 15 சதவீதம், அயன் 19% உள்ளது.
இந்த புளியில் இரண்டு வகைகள் உள்ளது குடம்புளி மற்றும் நாம் தற்போது சமையலில் பயன்படுத்தப்படும் புளியாகும் . இந்த குடம்புளி பழைய காலங்களில் பயன்படுத்தப்பட்டது தற்போது இதன் விலை சற்று அதிகமாக உள்ளதால் சாதாரண புளியை பயன்படுத்துகிறோம். ஆனால் கேரளாவில் இன்றும் இந்த புளியை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது மற்றும் நம் மூளையின் செயல் திறனை அதிகரிக்கச் செய்கிறது.
வெயில் காலங்களில் ஏற்படும் நீர்க்கடுப்பு ஆண்கள் பெண்கள் என இருவருக்குமே இந்த தொந்தரவு வரும். அப்போது புளி கரைசலுடன் சர்க்கரை சேர்த்து பருகினால் உடனே நின்று விடும்.
கை ,கால், இடுப்பு போன்றவற்றில் ஏற்பட்ட வலி, வீக்கம் மற்றும் சுளுக்கு ஏற்பட்டிருந்தால் புளி கரைசலுடன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து கூழ் பதத்திற்கு வந்ததும் மிதமான சூடு இருக்கும்போது வலி மற்றும் வீக்கம் உள்ள இடங்களில் பத்து போட்டு வந்தால் வீக்கம், வலி, சுளுக்கு போன்றவை நீங்கும்.
நம் குழம்பில் புலியை ஊற்றி சமைக்கும் போது காய்கறிகளில் உள்ள கனிமச்சத்து மற்றும் தாது சத்துக்கள் வீணாகாமல் அப்படியே நம் உடலுக்கு கிடைக்கும் என ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது.
புளியை அதிகம் நம் உணவில் எடுத்துக் கொள்ளும் போது பற்களில் கூச்சம் ஏற்பட்டு பல் வழுவிலந்து விடும். மேலும் ஈறுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். சர்க்கரை நோய் மற்றும் அல்சர் உள்ளவர்கள் மிகக் குறைந்த அளவே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நேரடியாக புலியை சேர்க்காமல் இன்டைரக்ட் ஆக எடுத்து கொள்ள வேண்டும் அதாவது குழம்பு, ரசம் போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். மேலும் இது பித்தத்தையும் அதிகரிக்கச் செய்யும். எனவே, புளியை நாம் உணவில் அளவோடு சேர்த்து பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…