அடடே! நம் குழம்பில் சேர்க்கும் புளிக்கு இவ்வளவு மகத்துவமா?

tamarind add Kuzhambu

அறுசுவைகளில் ஒன்றானது இந்த புளிப்பு சுவை. புளி  என்ற பெயரை கேட்டாலே நம்  நாவில் எச்சில்  ஊறும் அதுவே அதன் தனித்துவமாகும். இந்தியாவின் பேரிச்சம்பழம் என்று கூட ஒரு சிலர் கூறுகின்றனர் . நம் சமையலில் புளியை  பல வகைகளில் பயன்படுத்துகிறோம் புளி  குழம்பு, புளி ரசம் ,புளி சாதம் என பல வகைகளில் உணவே சேர்த்துக் கொள்கிறோம். அதன் பயன்களையும் சற்று தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா..

பாதாம் பருப்பை தோலுடன் சாப்பிடலாமா? வேண்டாமா? என்ற சந்தேகமா அப்போ இந்த பதிவை படிங்க..

புளி  இல்லாத மீன் குழம்பு, காரக்குழம்பு கிடையாது .புளியை சேர்த்து சமைக்கும் உணவு எளிதில் கெட்டுப்போவதில்லை ஆக இந்த புளி  நம் சமையலில் மிகவும் தொடர்புடையதாக உள்ளது. ஏன் கோவில்களில் கூட பானகம்  என்று சொல்லப்படும் புளி கரைசையில் சர்க்கரை கலந்த பானம்  கொடுப்பார்கள்.

நிறைந்துள்ள சத்துக்கள்

விட்டமின் பிசத்துக்கள், டார்ட்டாரிக்  ஆசிட், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் பாஸ்பரஸ் ,அயன் மற்றும்பைட்டோ  நியூட்ரியன்ட்ஸ் நிறைந்துள்ளது.

100 கிராம் புளியில் கால்சியம் 7 சதவீதம், பாஸ்பரஸ் 11 சதவீதம், காப்பர் மற்றும் விட்டமின் பீ சத்து 15 சதவீதம், அயன் 19% உள்ளது.

இந்த புளியில்  இரண்டு வகைகள் உள்ளது குடம்புளி மற்றும் நாம் தற்போது சமையலில் பயன்படுத்தப்படும் புளியாகும் . இந்த குடம்புளி பழைய காலங்களில் பயன்படுத்தப்பட்டது தற்போது இதன் விலை சற்று அதிகமாக உள்ளதால் சாதாரண புளியை  பயன்படுத்துகிறோம். ஆனால் கேரளாவில் இன்றும் இந்த புளியை  தான் பயன்படுத்தி வருகிறார்கள்.

பயன்கள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது மற்றும் நம் மூளையின் செயல் திறனை அதிகரிக்கச் செய்கிறது.

சிறுநீரகம்

வெயில் காலங்களில் ஏற்படும் நீர்க்கடுப்பு ஆண்கள் பெண்கள் என இருவருக்குமே இந்த தொந்தரவு வரும். அப்போது புளி கரைசலுடன் சர்க்கரை சேர்த்து பருகினால் உடனே நின்று விடும்.

  • புளியின்  கொட்டைகளை முழுமையாகவோ  அல்லது தோல் நீக்கியோ சாப்பிட்டால் நீர் கடுப்பு நீங்கும்.
  • ஆண்களுக்கு விதைப்பையில் ஏற்படும் கேன்சரை தடுக்கும்.

வயிற்றுப் பகுதி

  • நல்ல ஜீரண சக்தியை ஏற்படுத்தி உணவை எளிதில் செரிக்க  செய்யும். மேலும் உடலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைக்க உதவும்.

எலும்புகள்

  • இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் எலும்பு தேய்மானம் ஆவதை குறைக்கும்.

வலி நிவாரணி

கை ,கால், இடுப்பு போன்றவற்றில் ஏற்பட்ட வலி, வீக்கம் மற்றும் சுளுக்கு ஏற்பட்டிருந்தால் புளி கரைசலுடன் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து கூழ்  பதத்திற்கு வந்ததும் மிதமான சூடு இருக்கும்போது வலி மற்றும் வீக்கம் உள்ள  இடங்களில் பத்து போட்டு வந்தால் வீக்கம், வலி, சுளுக்கு போன்றவை நீங்கும்.

நம் குழம்பில் புலியை ஊற்றி சமைக்கும் போது காய்கறிகளில் உள்ள கனிமச்சத்து மற்றும் தாது சத்துக்கள் வீணாகாமல் அப்படியே நம் உடலுக்கு கிடைக்கும் என ஆராய்ச்சிகளில் கூறப்படுகிறது.

பின் விளைவுகள்

புளியை  அதிகம் நம் உணவில் எடுத்துக் கொள்ளும் போது பற்களில் கூச்சம் ஏற்பட்டு பல் வழுவிலந்து விடும். மேலும் ஈறுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். சர்க்கரை நோய் மற்றும் அல்சர் உள்ளவர்கள் மிகக் குறைந்த அளவே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நேரடியாக புலியை சேர்க்காமல் இன்டைரக்ட் ஆக எடுத்து கொள்ள வேண்டும் அதாவது குழம்பு, ரசம் போன்றவைகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். மேலும் இது பித்தத்தையும் அதிகரிக்கச் செய்யும். எனவே, புளியை நாம் உணவில் அளவோடு சேர்த்து பயன்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy