குடும்ப தலைவிகளுக்கான அசத்தலான பத்து கிச்சன் டிப்ஸ்கள்..!

இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சியை விரட்டும் முறைகள் மற்றும் எளிமையான வீட்டு குறிப்புகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.

cockroach (1)

சென்னை –இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் கரப்பான் பூச்சியை விரட்டும் முறைகள் மற்றும் எளிமையான வீட்டு குறிப்புகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.

கொசுக்கள் மற்றும் கரப்பான் பூச்சியை விரட்ட ;

சிறிதளவு தேங்காய் எண்ணெய்  எடுத்து அதில் நான்கு கற்பூரம் சேர்த்து நன்கு சூடாக்கி தூங்கும் இடத்தில் வைத்துவிட்டால் கொசு தொல்லை இருக்காது.

கிச்சனில் இருக்கும் சின்ன கொசுக்களை விரட்ட தக்காளியில் கிராம்பை குத்தி வைத்தால் கிச்சனில் கொசு அண்டாது.

ஒரு ஊதுபத்தி பாக்கெட்டில் உள்ள தூளை எடுத்து அதில் சூடம் சேர்த்து நுணுக்கி கொள்ளவும் .பிறகு அதில் தண்ணீர் சேர்த்து கலந்து கரப்பான் பூச்சி மற்றும் பச்சை வரும் இடங்களில் இரவில் தெளித்து விட்டால்  இதன் வாசனைக்கு கரப்பான் பூச்சி மற்றும் பச்சை  வராது.பிறகு காலையில் துடைத்து விடவும் .

கிச்சன் டிப்ஸ் ;

உப்பில் தண்ணீர் விடாமல் இருக்க ஒரு துணியில் 2 ஸ்பூன் அரிசி சேர்த்து அதனை மடித்து உப்பில்  வைத்து விட வேண்டும் .இதே போல் பூஸ்ட், ஹார்லிக்ஸ் கட்டிப்படாமல் இருக்க இந்த முறையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மிக்ஸி ஜார் மூடி லூசாகிவிட்டால் அதன் மீது ரப்பர் பேண்ட் போட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

எலுமிச்சை பழம் நீண்ட நாள் பிரசாக இருக்க அதன் மீது ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் தடவி வைக்கவும்.

கத்தரிக்கோல் நன்கு ஷார்பாக கல் உப்பில் ஐந்து நிமிடம் வெட்டி வெட்டி எடுத்தால் நல்ல பதம் வந்துவிடும்.

குக்கர் கேஸ்கட் லூசாகி விட்டால் அதன் வழியாக ஆவி வெளியேறும் .இதனால் விரைவில் குக்கர் விசில்  வராது. வாரத்திற்கு ஒரு முறை கேஸ் கட்டை கழுவி ஃப்ரீசரில் வைத்து விட வேண்டும் .பிறகு பயன்படுத்தும் போது அதன் வடிவம் மாறாமல் இருக்கும்.

புளியில்  பூச்சிகள் வராமல் இருக்க புளி வைக்கும் பாத்திரம்  அல்லது டப்பாவில்  கிராம்புகளை போட்டு அதன் மீது புளிகளை வைத்தால் பூச்சிகள் வராமல் இருக்கும்.இந்த பயனுள்ள  எளிய டிப்ஸ்களை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்