Tea : மக்களே… நீங்க போடுற டீ டேஸ்டே இல்லையா..? அப்ப இப்படி ட்ரை பண்ணி பாருங்க..!
நம்மில் சிறியவர்கள் முதியவர்கள் வரை பலரும் டீ, காபிக்கு அடிமையாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். பலருக்கும் டீயுடன் தான் பொழுது விடியும். அந்த வகையில், டீயில் பலவகையான டீ உள்ளது. மசாலா டீ, ஏலக்காய் டீ, புதினா டீ என பலவகை உள்ளது. தற்போது இந்த பதிவில் வித்தியாசமான முறையில், சுவையான டீ போடுவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- கெட்டியான பால் – கால் லிட்டர்
- தேயிலை 2 ஸ்பூன்
- ஏலக்காய் – 5
- இஞ்சி ஒரு துண்டு
- சீனி – 2 ஸ்பூன்
Tea செய்முறை
முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க விட வேண்டும். மற்றுமொரு பாத்திரத்தில், ஏலக்காய், தேயிலை, இஞ்சி மற்றும் சீனி ஆகியவற்றை போட்டு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். பின் காய்ச்சி வைத்துள்ள பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாற வேண்டும்.
நம்மில் பலரும் டீயை எப்படி போட்டாலும் ருசியாக இல்லை என அக்கருத்துபவர்கள் இந்த முறையை ட்ரை பண்ணி பார்க்கலாம். இந்த முறையில் டி ஊற்றினால், நல்ல சுவையுடனும், மணமுடனும் காணப்படும்.