வெயில் காலத்தில் கைகள் கருத்துப்போய்விட்டதா? இதை செய்தாலே போதும்..!

Default Image

வெயில் காலத்தில் நாம் வெளியே சென்று வந்தாலே போதும் நிறம் கருமையாகிவிடும். இந்த கருமை மறைய இந்த குறிப்பு போதும்.

பொதுவாகவே வெயில் காலத்தில் வெளியே சென்றால் முகம், கை, கால் உடல் முழுவதும் கருமை நிறமாக மாறிவிடும். இது போன்ற சூழ்நிலையில் முகத்திற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு கைகளுக்கும் கொடுக்க வேண்டும். கைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தயிர், எலுமிச்சை மற்றும் சாதம்: முதலில் 1 டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் அரிசி தூள் இந்த பேக் செய்வதற்கு தேவை. இந்த பொருட்கள் அனைத்தையும் கலந்து கைகளில் இந்த பேக்கை தடவவும். இதனைக் கொண்டு சிறிது நேரம் கைகளை மசாஜ் செய்யவும். அதன் பிறகு சுத்தமான தண்ணீரில் கழுவவும். இதிலுள்ள எலுமிச்சை ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்டுள்ளது அதே நேரத்தில் அரிசி சருமத்தில் அழுக்குகளை வெளியேற்றுகிறது. இதனால் கைகள் பளிச்சென்று இருக்கும்.

காபி ஸ்க்ரப்: இந்த ஸ்க்ரப் செய்ய காபி, அரை தேக்கரண்டி தேன் மற்றும் அரை தேக்கரண்டி பால் தேவைப்படும். இந்த பொருட்கள் அனைத்தையும் கலந்து ஒரு ஸ்க்ரப் தயார் செய்யுங்கள். இப்போது இந்த ஸ்க்ரப் மூலம் கைகளை சிறிது நேரம் மசாஜ் செய்து, அதன் பிறகு வெற்று நீரில் கைகளை கழுவவும்.

பப்பாளி: பப்பாளி கருமை நீங்க மிகவும் அதிக அளவில் உதவும். இதற்கு உங்களுக்கு 1 டீஸ்பூன் பப்பாளியின் சதைப்பகுதி மற்றும் 1 டீஸ்பூன் பப்பாளி விதைகள் தேவைப்படும். முதலில் பப்பாளியை துண்டுகளாக நறுக்கி அதன் சதைப்பகுதியை பிசைந்து கொள்ளவும். இப்போது அதனுடன் பப்பாளி விதைகளை சேர்த்து 5 நிமிடம் உங்கள் கைகளை மசாஜ் செய்யவும். இதைச் செய்த பிறகு, சருமத்தை சுத்தம் செய்யுங்கள். இது சருமத்தை மிகவும் ஆழமாக சுத்தம் செய்ய உதவும்.

தயிர் மற்றும் மஞ்சள் பேக்: இதற்கு அரை கப் தயிர் வேண்டும். அதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் தேவை. இதை இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை கைகளில் தடவி 15 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

இது போன்ற ஒரு முறையில் தொடர்ந்து செய்து வர உங்கள் கைகளின் கருமை மறைந்து நிறம் மெருகேறும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

VidaaMuyarachi - mk stalin
lyca productions vidaamuyarchi
Virat Kohli
Champions Trophy Digital Tickets
IND VS ENG 1ST ODI TOSS
Vidamuyarchi
Marcus Stoinis