தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் .!அறுசுவை பச்சடி செய்வது எப்படி ?
மாங்காய் பச்சடி – தமிழ் புத்தாண்டு அன்று அவசியம் செய்ய வேண்டிய அறுசுவை பச்சடி செய்வது எப்படி என காணலாம்.
தேவையான பொருட்கள்:
- மாங்காய் =350 கிராம்
- வெல்லம் =150-200 கிராம்
- எண்ணெய் =3 ஸ்பூன்
- கடுகு =அரை ஸ்பூன்
- கருவேப்பிலை சிறிதளவு
- பச்சை மிளகாய் =1
- காய்ந்த மிளகாய் =2
- மஞ்சள் தூள் =அரை ஸ்பூன்
- மிளகாய் தூள் =அரை ஸ்பூன்
- பெருங்காய தூள் =அரை ஸ்பூன்
- வேப்பம் பூ =6-7
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தோலுடன் பொடி பொடியாக நறுக்கிய மாங்காயையும் சேர்த்து வேக வைக்கவும்.
வேகும் போது சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு ,பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்து வேக வைக்கவும். மாங்காய் வெந்தவுடன் வெல்லத்தை கரைத்து வடிகட்டி சேர்த்துக் கொள்ளவும், அதை கிளறி இரண்டு நிமிடம் கழித்து வேப்பம்பூவையும் சேர்த்து கிளறி இறக்கினால் அறுசுவை பச்சடி தயாராகிவிடும்.