” சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுகண்பீளை செடி” ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்.!

கிட்னி ஸ்டோன்க்கு மிகச் சிறந்த மூலிகை சிறுகண்பீளை. இதில் ஆன்டி யூரோலெதிட்டிக்  ஆக்டிவிட்டி நிறைந்துள்ளது. அதனால்  சிறுநீரக கற்களை சிறிது சிறிதாக கரைக்கும்

siruganpeelai (1)

சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சிறுகண்பீளை  ;

சித்தா ஆயுர்வேதத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மருந்தாக இந்த சிறுகண்பீளை மூலிகை கருதப்படுகிறது .இதற்கு  சிறுபீளை , கண் பீளை , பொங்கல் பூ, பாஷான பேதி, தேங்காய் பூ கீரை, கற்பேதி என பல பெயர்கள் உள்ளது .இது சாதாரணமாக தரிசு நிலம் மற்றும் ரோட்டோரங்களில் எளிதில் கிடைக்கக்கூடிய மூலிகையாகும். மேலும் இது மார்கழி தை மாதங்களில் அதிகம் தென்படக்கூடியதாகும்.

இதில் மற்ற மூலிகையை விட அதிக அளவு ஆல்கலாய்டு,  பிளேவனாய்ட்ஸ் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளது .சாதாரண தலைவலி முதல் புற்றுநோய் வரை மருந்தாக பயன்படுத்தப்படுகிறது என சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் கூறப்படுகிறது. குறிப்பாக சிறுநீரகம் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக விளங்க கூடியது இந்த மூலிகையாகும்.

சிறுநீரக கற்களை கரைக்கிறது;

கிட்னி ஸ்டோன்க்கு மிகச் சிறந்த மூலிகை சிறுகண்பீளை. இதில் ஆன்டி யூரோலெதிட்டிக்  ஆக்டிவிட்டி நிறைந்துள்ளது. அதனால்  சிறுநீரக கற்களை சிறிது சிறிதாக கரைக்கும். மேலும் சிறந்த சிறுநீர் பெருக்கியாகவும் உள்ளது. சிறுநீர் எரிச்சல் மற்றும் வலியையும் குணப்படுத்துகிறது. சிறுகண்பீளை சூரணத்துடன் சம அளவு சீரகம் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அது ஒரு டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் உணவுக்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டும்.

சிறுநீரக செயல் இழப்பை தடுக்கிறது;

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயால் சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான்கள் சேதம் அடைந்து சிறுநீரகம் சுருங்கி செயலிழப்பை உண்டாகும் . இந்த  சிறுகண்பிழையில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் மட்டும் ஆன்டி  இன்ஃப்லோமெட்ரி பண்புகள் நெப்ரான்கள் செயலிழப்பை தடுக்கிறது. மேலும் கழிவுகளை  வெளியேற்றவும் உதவுகிறது. அது மட்டுமல்லாமல் சிறுநீரகத்தில் தொற்று  வருவதையும் தடுக்கிறது. சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் தினமும் இந்த மூலிகையை டீயாக அருந்தி வந்தால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

சிறுநீரகத் தொற்று;

இந்த மூலிகையில் உள்ள பினோலிக்  காம்பவுண்ட், பிளேவனாய்ட்ஸ் மற்றும் டானின் போன்ற பயோ ஆக்டிவ் காம்பவுண்ட் அதிகம் உள்ளது. இவை சிறுநீரகத்தில் தொற்றை   ஏற்படுத்தும் ஈகோலை பாக்டீரியாவை அளித்து சிறுநீரகம் மூலம் வெளியேற்றுகிறது.

சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது;

டைப் 2 சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது . இதில் உள்ள சத்துக்கள் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் சேதம் அடைவதை தடுத்து இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது .மேலும் டயாபட்டிக் நெப்ரோபதி வராமலும் தடுக்கிறது.

குடல்  சார்ந்த பிரச்சனைகள்;

IBD [Inflammatory bowel disease ] போன்ற குடல் சார்ந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் காலை வெறும் வயிற்றில் சிறுகண்பீளை சாறுடன் நீர்மோர் சேர்த்து குடித்து வர நாளடைவில் குணம் அடைகிறது என சித்தா மற்றும் ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் வயிற்றுப்போக்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது. வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாவை அழித்து நல்ல பாக்டீரியாவை வளர செய்கிறது. குடல் புழுக்களையும் அகற்றுகிறது. இதன் வேர், தண்டு, இலை, பூ என அனைத்தையும் ஒரு கைப்பிடி எடுத்து கொதிக்க வைத்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் குடித்து வர குடல் புண் மற்றும் குடல் புழுக்கள் அகற்றப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் கருப்பை புற்றுநோய், கோலன் கேன்சர் போன்ற புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது. ஆகவே இந்த சிறுகண்பீளை மூலிகையை பயன்படுத்துவதற்கு முன் ஒருமுறை சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவரை ஆலோசித்து பிறகு பயன்படுத்தி அதன் பயன்பெறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 04 03 2025
PMModi -Animals
IMD - Summer
IndvsAusSfinal
TN CM MK Stalin
steve smith travis head
Actress Vijayalakshmi