சௌசௌ காயின் அசர வைக்கும் நன்மைகள்..!
கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய சத்துக்களில் போலேட் முக்கியமானது. ஏனெனில் இது கருவில் இருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சிக்கும், தண்டுவட வளர்ச்சிக்கும் உதவுகிறது.
சென்னை- காய்கறிகளில் ஒரு சில காய்கறிகளுக்கு மட்டும் தான் நாம் உடலில் உள்ள பலவித பிரச்சனைகளுக்கு மருந்தாக அமைகின்றது .அந்த வகையில் சௌசௌ முக்கிய காய்கறியாக உள்ளது.
சௌசௌ என்ற பெயருக்கு ஏற்ப இந்த காய் சாப்பிடுவதற்கு சற்று சவச்சவ என இருக்கும் இதனால் சிலருக்கு பிடிக்காத காய்கறியாக உள்ளது. ஆனால் இது எண்ணற்ற சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் உள்ளடக்கியுள்ளது.
சௌசௌ காயின் நன்மைகள்;
உடல் எடை குறைப்பு;
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த சௌசௌ காயை தேர்வு செய்யலாம். ஏனென்றால் கலோரிகள் மிக குறைவு தான் , நார்ச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. இது நல்ல வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால்நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும் இதன் மூலம் உடல் எடையும் கணிசமாக குறையும்.
இதய ஆரோக்கியம்;
ரத்தத்தில்[homocysteine ]ஹேமொ சிஸ்டின் அளவு அதிகமாக இருந்தால் தான் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர் . ஆனால் சௌசௌ சாப்பிடுவதன் மூலம் இதில் உள்ள பாலிபினால் மற்றும் பைட்டோ கெமிக்கல் சத்துக்கள் ஹேமொசிஸ்டின் அளவை சீராக வைக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது .மேலும் இதில் மெர்சிடின் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
ரத்த சோகை;
உடலில் ரத்த உற்பத்திக்கு இரும்பு சத்து , விட்டமின் பி2 ,விட்டமின் பி9 போன்ற சத்துக்கள் தேவைப்படும். இந்தச் சத்துக்கள் சௌசௌவில் அதிகம் இருப்பதால் புதிய ரத்த உற்பத்திக்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல் அனிமியா வருவதையும் தடுக்கிறது.
கல்லீரல் ஆரோக்கியம்;
கல்லீரலில் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று பேட்டி லிவர்[ fatty liver]ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பதாலும் உடலில் மெட்டபாலிசம் சீராக நடைபெறாமல் இருந்தாலும் கல்லீரலில் கொழுப்பு படியும். ஆனால் சௌசௌ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் கல்லீரல் செயல்பாட்டை அதிகரித்து கல்லீரலில் கொழுப்பு படிவதும் தடுக்கப்படுகிறது.
கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியம்;
கர்ப்ப காலத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய சத்துக்களில் போலேட் முக்கியமானது. ஏனெனில் இது கருவில் இருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சிக்கும், தண்டுவட வளர்ச்சிக்கும் உதவுகிறது. இந்த போலேட் சத்து சௌசௌவில் அதிகம் நிறைந்துள்ளது.
சிறுநீரக ஆரோக்கியம் ;
சௌசௌ காயில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது .இது சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கிறது. மேலும் நீர் சத்து 94 சதவீதம் இந்த காயில் உள்ளதால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் சிறுநீர் நன்கு பிரிந்து மலச்சிக்கல் வருவதும் தடுக்கப்படுகிறது. இவ்வளவு நன்மைகள் கொண்ட இந்த சௌசௌ காயை வாரத்திற்கு இரண்டு மூன்று நாட்களாவது பயன்படுத்தி அதன் பயன்களை பெற்றுக் கொள்வோம்.