உங்கள் கேஸ் சிலிண்டரை மிச்சப்படுத்த சூப்பரான டிப்ஸ் ரெடி..

cylinder saving

ஒரு சில வீடுகளில் கேஸ் சிலிண்டர் ஒரு மாதம் தான் வரும், விரைவில்  தீர்ந்துவிடும் அவ்வாறு இல்லாமல் நீண்ட நாட்கள் வருவதற்கு பல குறிப்புகள் உள்ளது அது என்னவென்று இப்பதிவில் பார்ப்போம்.

கேஸ் சிலிண்டர் விரைவில் தீர்ந்து விடுவதற்கு நாமும் சில தவறுகளை செய்கின்றோம்.

  • அடுப்பை சுத்தம் செய்யும்போது பர்ணரை மட்டும் ஒரு பாக்ஸால் மூடிவிட்டு பிறகு கழுவலாம். ஏனென்றால் அதில் தண்ணீர் பட்டால்  அதன் ஈரம்  காய தேவையில்லாமல் கேஸ் வீணாகும் . நேரம் கிடைக்கும் சமயங்களில் பர்ணரை நன்றாக சுத்தம் செய்து வெயிலில் காயவைத்து பயன்படுத்தலாம்.
  • பாத்திரங்களை கழுவிய  ஈரத்தோடு அடுப்பில் வைத்தால் கேஸ் அதிகம் வீணாகும் ஏனென்றால் அந்த ஈரப்பதம் காய்ந்து பிறகுதான் பாத்திரம் சூடேறும் இதனால் கேஸ் வீணாகும். இதை தடுக்க முன்பே நாம் கழுவி விட்டு துணியால் துடைத்து பிறகு அடுப்பில் வைக்கலாம்.
  • அரிசி, பருப்பு மற்றும் பயிர் வகைகளை ஊறவைத்து வேக வைத்தால் விரைவில் வெந்து விடும். இதனால் கேஸ் மிச்சமாகும். ஊற வைக்க தவறி விட்டால் எண்ணெயில் லேசாக வறுத்து விட்டு  பிறகு வேக வைத்தால் விரைவில் வந்துவிடும்.
  • நிறைய பேருக்கு சமைக்கும் போது ,கறி  மற்றும் காய்கறிகளை வேகவைக்கும் பாத்திரத்தில் தேங்காய் ஓடை போட்டால் சீக்கிரம் வெந்துவிடும். கறி வெந்த பிறகு தேங்காய் ஓடை[கொட்டாங்குச்சி ] எடுத்து விட வேண்டும்.
  • சமைக்க பயன்படுத்தும் பாத்திரங்கள் தட்டையானதாக இருக்க வேண்டும். இந்த பாத்திரங்களில்தான்  வெப்பம் சம அளவில் பரவி விரைவில் சூடாகும்.சமைக்க தேவையான பொருட்களை அடுப்பு பற்ற வைக்கும் முன்பே தயாராக வைத்து கொள்ள வேண்டும்.
  • காய்கறி மற்றும் தக்காளி போன்றவற்றை வதக்கும்போது மூடி போட்டு வேக வைத்தால் அந்த ஆவியிலேயே பாதி வெந்துவிடும். திறந்து வைத்தால் கேஸும்  வீணாகும் , அதன் சத்துக்களும் வீணாகும்.
  • குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு ஏற்றது போல் அளவான பாத்திரங்களை வைத்து சமைக்க வேண்டும் உதாரணமாக இரண்டு பேருக்கு சமைக்க வேண்டியது இருந்தால் நான்கு பேருக்கு அளவான பெரிய  பாத்திரம் வைத்து சமைத்தால் கேஸ் வீணாகும் ஆகவே  அளவான  பாத்திரங்களை கையாள்வது சிறந்தது. அதேபோல் தண்ணீர் ஊற்றும் போது அளவாக ஊற்ற வேண்டும் அதிகமாக ஊற்றி விட்டால் அந்த தண்ணீர் வற்றுவதற்கு சிறிது கேஸ் வீணாகும்.

இவ்வாறு  சின்ன சின்ன விஷயங்களை கூட நாம் பார்த்து பார்த்து செய்தோமே ஆனால் கேஸ்  சிலிண்டர் நீண்ட நாளுக்கு வரும் ,இதனால் தேவையில்லாத செலவை குறைக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்