சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்..!

facebeauty

கோடைகாலத்தில் சரும பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் பேஸ் மாஸ்க்குகள்.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நாம் நமது தேவைக்காக வெளியில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். அதிகப்படியான வெயிலின் தாக்கம் நமது உடலில் பல்வேறு வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை காத்து சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய சில பேஸ் மாஸ்க்குகள் பற்றி பார்ப்போம்.

தக்காளி மாஸ்க்

tomato
tomato [Imagesource : india.com]

தக்காளியில் நமது சருமத்தை பளபளவென மாற்றாக கூடிய தன்மை உள்ளது. தக்காளி கடுமையான சூரியக் கதிர்களின் தாக்கத்திற்கு பின், சருமத்தை ஆற்றவும், ஊட்டமளிக்கவும் உதவுகிறது. முதலில் முகத்தில் ஈரமான டவலை வைத்து பின்னர் தக்காளி கூழ் தடவவும். 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து நீரில்  கழுவ வேண்டும். இவ்வாறு கழுவினால் நமது சரும ஆரோக்கியம் மேம்படும்.

எலுமிச்சை சாறு மற்றும் தேன்

lemon
lemon [Imagesource :Lankasri]

 எலுமிச்சை மற்றும் தேன் பயன்படுத்தி ஒரு மாஸ்க் செய்யலாம். எலுமிச்சை சாறு ஒரு இயற்கையான ப்ளீச்சராக செயல்படுகிறது மற்றும் உடலில் இருந்து  இறந்த செல்களை நீக்குகிறது. தேன் சேர்ப்பது நமது சருமத்திற்கு பொலிவை தரும். அந்த வகையில், எலுமிச்சை சாறு மற்றும் தென் கலந்து முகத்தில் தடவி, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஓட்ஸ் மற்றும் மோர் மாஸ்க்

oats
oats [Imagesource : Boldsky]

ஓட்ஸ் சருமத்தை பிரகாசமாக்கும் தன்மை கொண்டது. அதே வேளையில் மோர் ஒரு இனிமையான உணர்வைத் தருகிறது. ஓட்ஸை மோரில் 5-10 நிமிடங்கள் ஊறவைத்து, அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்திலோ அல்லது வேறு ஏதேனும் தோல் சம்பந்தமான பிரச்சனை உள்ள உடல் பாகத்திலோ தடவ வேண்டும். அதைக் கழுவுவதற்கு முன் அந்தப் பகுதியைத் துடைக்க வேண்டும். பின் அதனை நீரில் கழுவ வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்