குளிர்காலத்திலேயும் உங்கள் சருமம் பளபளக்க சூப்பர் டிப்ஸ்.!
குளிர்காலம் வந்துவிட்டாலே நம்மில் பலருக்கு குறிப்பாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு தோல் வெடிப்பு, உதடு வெடிப்பு மற்றும் பாதங்களில் வெடிப்பு அதிக அளவு காணப்படும். இதிலிருந்து நம் சருமத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
தோல் பராமரிப்பு
சருமம் வறண்டு போவதற்கு முதல் காரணம் தண்ணீர் குறைவாக குடிப்பது தான். அதுவும் குளிர் காலம் வந்து விட்டால் அதிக சிறுநீர் கழிக்க வேண்டும் என்று நினைத்து தண்ணீரின் அளவை குறைத்துக் கொள்கிறோம். இது மிகவும் தவறான செயல் ஆகும். நம் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் குடித்தாலே தோல் வறட்சியை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
அடடே.! மூன்று மாதத்திற்கு ஒரு முறை குடலை சுத்தம் செய்தால் இவ்வளவு நன்மையா.?
அதிக குளிரின் காரணமாக சுடு தண்ணீரில் குளிப்பதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இயற்கையாக நம் தோளில் சுரக்கக்கூடிய எண்ணெய் பசையை இந்த சுடு தண்ணீர் நீக்கிவிடும். இதனால் தோல் வறட்சி அதிகமாகும். எனவே மிதமான சூட்டில் குளிப்பதே சிறந்தது.
குளித்த முடித்து அடுத்த நொடியே மாய்ஷரைசர் தடவுவது சிறந்தது. இது நம் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ள உதவும். கற்றாழையை ஏழு முறை தண்ணீரில் கழுவி பிறகு சருமத்தில் தடவி வரலாம். இது இயற்கையான சிறந்த மாய்ஷரைசர் ஆகும்.
தேங்காய் எண்ணெயை சருமத்தில் தடவிக் கொள்ளலாம் முகப்பரு மற்றும் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் முகத்தில் தேய்க்க கூடாது. வேண்டுமானால் குளிப்பதற்கு முன்பே தேய்த்து விட்டு பிறகு குளித்தால் முகம் பொலிவோடு இருக்கும்.
உதடு பராமரிப்பு
ஒரு சிலருக்கு உதடு வெடிப்பு ஏற்பட்டு ரத்தமே வந்துவிடும். இதற்கு மிகச் சிறந்த மருந்து தேங்காய் எண்ணெய் அல்லது நெய் பயன்படுத்தினால் விரைவில் புண் ஆறும். தினமும் இதை தடவி வந்தால் உதட்டில் ஏற்படும் கருமை நீங்கும். லிப் பாம், லிப் ஸ்டிக் போன்ற உதடு சாயங்களை பயன்படுத்தினால் உதடு வறண்டு போகாமல் இருக்கும்.
இந்த உணவுகளோடு இதை சேர்த்து சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா.?
கால் பராமரிப்பு
சுடுதண்ணீரில் கல் உப்பு போட்டு 10 – 15 நிமிடம் கால்களை ஊறவிட்டு, பின்பு கழுவி கால்களை ஈரம் இல்லாமல் உலர்த்தி விளக்கெண்ணையை கொண்டு மசாஜ் கொடுத்து வந்தால் வெடிப்புகள் வராமல் கால் பாதுகாப்பாக இருக்கும். இந்த முறையை வாரத்தில் இரண்டு நாட்கள் செய்யலாம்.
எனவே இந்த குளிர்காலத்தில் குளிர்காலத்திற்கு ஏற்ப உடைகளான ஸ்வெட்டர் கால்களுக்கு கால்உறை அணிந்து தினமும் இந்த டிப்ஸையும் கடைபிடித்து நம் சருமத்தை பாதுகாத்துக் கொள்வோம்.