வறண்ட சருமத்தை பளபளப்பாக்க சூப்பர் டிப்ஸ்!
நாம் நமது அன்றாட வாழ்வில், நமது சரும அழகை மெருகூட்டுவதற்காக பல வகையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அதற்காக நாம் அதிகப்படியான பணத்தையும் செலவிடுகிறோம். ஆனால், நாம் பணத்தை செயற்கையான வழிகளில் மருத்துவம் மேற்கொள்ள தான் செலவிடுகிறோம்.
எந்த விதத்திலும் நாம் செயற்கையான முறையை பின்பற்றும் போது, பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. நாம் இயற்கையான முறையை பின்பற்றும் போது, முழுமையான தீர்வினை பெறலாம்.
தற்போது இந்த பதிவில் வறண்ட சருமத்தை இயற்கையான முறையில் எவ்வாறு பளபளப்பாக்கலாம் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- பாலாடை
- எலுமிச்சை சாறு
- கசகசா
செய்முறை
முதலில் சிறிதளவு பாலாடையை எடுத்துக் கொள்ள வேண்டும். பாலாடையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து, முகம், கை, கால்களில் தேய்க்க வேண்டும். அது ஊறிய பிறகு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், நல்ல பலனை காணலாம்.
அடுத்ததாக பாலாடையுடன் கசகசாவை ஊற வைத்து, அதன் பின் அரைத்து முகம் மற்றும் கை, கால்களில் பூசி, அது ஊறிய பிறகு குளித்தால், சருமம் மென்மையாவதுடன், சரும வறட்சியை போக்கி, பளபளப்பாக்குகிறது.