இல்லத்தரசிகளுக்கு சூப்பர் டிப்ஸ்..! இனிமே இட்லிக்கு சட்னி இப்படி செய்து பாருங்க…!

Published by
லீனா

நம்மில் பெரும்பாலானோர் காலை மற்றும் இரவு நேரங்களில் இட்லி, தோசை போன்ற உணவுகளை தான் பெரும்பாலும் செய்வதுண்டு. இந்த உணவுகளுக்காக நாம் சட்னி செய்வதுண்டு. அந்த சட்னி தான் நாம் செய்யும் உணவுக்கே சுவை சேர்க்க கூடிய ஒன்று என சொல்லலாம். அந்த வகையில், தற்போது இந்த பதிவில், ஹோட்டலில் செய்வது போல அசத்தலான காரச்சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை 

பூண்டு – 10 பல்

வரமிளகாய் – 10

காஷ்மீரி சில்லி – 4

பெரிய வெங்காயம் – 2

புதினா, கொத்தமல்லி – சிறிதளவு

புலி – ஒரு துண்டு

உப்பு – தேவையான அளவு

பொட்டுக்கடலை – 3 ஸ்பூன்

வேர்க்கடலை – 2 ஸ்பூன்

கடுகு – சிறிதளவு

உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

சீரகம் – 1 ஸ்பூன்

செய்முறை 

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, 10 பல் பூண்டு, வர மிளகாய் 10, காஷ்மீரி சில்லி 4, பெரிய வெங்காயம் ஒன்று நறுக்கியது, புதினா,கொத்தமல்லி, புளி ஒரு துண்டு , பொட்டுக்கடலை 3 ஸ்பூன், வேர்கடலை, தேவையான அளவு  ஆகியவற்றை போட்டு சிறிதளவு எண்ணெயில் தாளித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

chadney [Imagesource : representative]

பின் அதனை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அதனுள் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மீண்டும் அறைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, நறுக்கிய வெங்காயம், வர மிளகாய், கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை போட்டு வதக்கிய பின்பு அரைத்து வைத்துள்ள கலவையை ஊற்றி சிறிது கொதிக்க விட்டு இறக்கிவிட வேண்டும். இந்த சட்னியை  இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு ஊற்றி சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

Published by
லீனா

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

8 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago