முகத்தை பளபளப்பாக்கும் சூப்பர் டிப்ஸ்!
நாம் நமது அன்றாட வாழ்வில் நமது அழகை அழகை மெருகூட்டுவதற்காக பல வகையான விலையுயர்ந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறோம். இந்த பொருட்களை பயன்படுத்தினால் நாம் பளபளப்பாகலாம் என எண்ணுவதுண்டு. ஆனால், அதில் உள்ள அதிகப்படியான கெமிக்கல்கள் நமது உடலில் பல விதமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஆனால், இளம் தலைமுறையினரை பொறுத்தவரையில், தங்களது அழகை மெருகூட்டுவதற்காக பலரும் செயற்கையான மருத்துவ முறையை தான் பின்பற்றுகிறோம். ஆனால், நமது சரும அழகை நிரந்தரமான முறையில் அழகாக்க இயற்கையான மருத்துவத்தை பின்பற்றுவது தான் சிறந்தது.
தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில், முகத்தை பொலிவு பெற செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- கிவி பழம்
- மாய்ஸ்சுரைசர்
செய்முறை
முதலில் கிவி பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதன்பின் அந்த பாதியை எடுத்து, மிக்சியில் போட்டு அரைத்து பேஸ்ட் போல எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவ வேண்டும்.
பின் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும். இறுதியில் முகத்தை துணியால் துடைத்து, மாய்ஸ்சுரைசர் ஏதேனும் பயன்படுத்த வேண்டும்.