முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கு நீங்க சூப்பர் டிப்ஸ்!
இன்று நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, கொழுப்புள்ள உணவுகளை விரும்பி சாப்பிடுகிறோம். இதனால், நமது உடலில் தேவையற்ற கொழுப்புகள் உருவாகிறது. இதனால், முகம் கூட எண்ணெய் பிசுக்குடன் காணப்படுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்கை போக்குவது எப்படி என்று பார்ப்போம்.
தேவையானவை
- முல்தானி மட்டி – 1 டீஸ்பூன்
- சந்தனப்பொடி – 1 டீஸ்பூன்
- பன்னீர் – சிறிதளவு
செய்முறை
முதலில் தேவையான அணைத்து பொருட்டாக்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முல்தானி மட்டி, சந்தன பொடி மற்றும் பன்னீர் மூன்றையும் ஒன்றாக கலந்துக்க கொள்ள வேண்டும். இதனை பேஸ்ட் போல் கெட்டியாக தயாரித்துக் கொள்ள வேண்டும்.
பின் இந்த பேஸ்ட்டை 20-30 நிமிடங்கள் வரை முகத்தில் பூசி வைத்திருந்து. அதன் பின்னர் சாதாரண நீரால் முகத்தை கழுவி வந்தால், முகத்தில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாக மாறி விடும்.