சண்டே ஸ்பெஷல்..! கார சாரமான பெப்பர் சிக்கன் இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க ..!
நாவிற்கு ருசியான பெப்பர் சிக்கன் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
சென்னை :நாவிற்கு ருசியான பெப்பர் சிக்கன் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் -அரை கிலோ
- சோம்பு -ஒரு ஸ்பூன்
- எண்ணெய் -நான்கு ஸ்பூன்
- பூண்டு- எட்டு பள்ளு
- இஞ்சி பூண்டு பேஸ்ட் -ஒரு ஸ்பூன்
- வெங்காயம்- 3
- மஞ்சள் தூள் -ஒரு ஸ்பூன்
- மல்லித்தூள்- ஒரு ஸ்பூன்
- சீரகத்தூள் -அரை ஸ்பூன்
- மிளகுத்தூள் -ஆறு ஸ்பூன்
- கரம் மசாலா -அரை ஸ்பூன்.
செய்முறை;
ஒரு அகலமான பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு சேர்த்து பொரிந்ததும் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு வதக்கி மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் மிளகுத்தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து எடுத்து வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து கலந்து விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளவும் .
இடையிடையே கிளறி விட வேண்டும் .15 நிமிடம் கழித்து அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொண்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும் .பிறகு நான்கு ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடங்கள் கிளறிவிட்டு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் காரசாரமான பெப்பர் சிக்கன் தயாராகிவிடும்.