சண்டே ஸ்பெஷல்..! மணப்பட்டி சிக்கன் சுக்கா செய்வது எப்படி.?

மணப்பட்டி  சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம்.

chicken sukka (1)

சென்னை :மணப்பட்டி  சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்;

  • சிக்கன்- ஒரு கிலோ
  • எண்ணெய் – 150 கிராம்
  • சீரகத்தூள் -50 கிராம்
  • மிளகாய்த்தூள்- 50 கிராம்
  • பூண்டு- 50 கிராம்
  • மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
  • இஞ்சி -10 கிராம்
  • வரமிளகாய்- 2
  • கருவேப்பிலை -சிறிதளவு.

Raw chicken (3) (2)

செய்முறை;

முதலில் சிக்கனை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளவும். பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில்  வெறும் சிக்கனை மட்டும் சேர்த்து ஐந்து நிமிடம் கிளற வேண்டும். அதன் பிறகு சிக்கனிலிருந்து வெளியேறிய தண்ணீரை தனியாக எடுத்து விட வேண்டும். இப்போது சிக்கன் மீது 150 கிராம் எண்ணெய் ஊற்றி கிளற வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன், வரமிளகாய், மிளகாய்த்தூள் ஆகியவற்றையும் சேர்த்து கலந்து விட வேண்டும்.

இப்போது 75% சிக்கன் வெந்த பிறகு சீரகத்தூள் மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சியையும் சேர்த்து கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.பிறகு  நன்கு கிளறி கொண்டே  இருக்க வேண்டும் .சிக்கன் வெந்த பிறகு இறக்குவதற்கு ஐந்து நிமிடத்திற்கு முன் இடித்து வைத்துள்ள பூண்டையும் கருவேப்பிலையும் சேர்த்து கலந்து விட்டு இறக்கினால் கமகமவென மணப்பட்டி  சிக்கன் சுக்கா தயாராகிவிடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்