சண்டே ஸ்பெஷல்..!மொறு மொறுவென முட்டை பக்கோடா செய்வது எப்படி?..
Egg Recipe- முட்டையை வைத்து பக்கோடா செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்;
- முட்டை= பத்து
- மிளகாய்த்தூள்= இரண்டு ஸ்பூன்
- காஷ்மீர் மிளகாய்த்தூள்= அரை ஸ்பூன்
- கரம் மசாலா= அரை ஸ்பூன்
- சீரகத்தூள் =ஒரு ஸ்பூன்
- இஞ்சி பூண்டு =பேஸ்ட் ஒரு ஸ்பூன்
- அரிசி மாவு= அரை கப்
- கான்பிளவர் மாவு= அரை கப்
- எலுமிச்சை சாறு= ஒரு ஸ்பூன்
- எண்ணெய் = தேவையான அளவு
செய்முறை;
முதலில் முட்டையை மிதமான தீயில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும். இப்போது அதன் தோலை நீக்கி வெள்ளை கருவை மட்டும் தனியாக எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதனுடன் மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் ,தேவையான அளவு உப்பு ,எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து விடவும்.
பிறகு மற்றொரு பாத்திரத்தில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பிரட்டி வைத்துள்ள முட்டைகளை எடுத்துப் போட்டு பொறித்து எடுத்தால் மொறுமொறுவென முட்டை பக்கோடா ரெடி.