சண்டே ஸ்பெஷல்..! அசத்தலான சுவையில் அரச்சு விட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி?.
சென்னை -காரசாரமான அரைச்சு விட்ட மட்டன் குழம்பு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்;
- மல்லி= இரண்டு ஸ்பூன்
- சீரகம்= ஒரு ஸ்பூன்
- சோம்பு =ஒரு ஸ்பூன்
- மிளகு= ஒரு ஸ்பூன்
- பட்டை= ஒரு துண்டு
- ஏலக்காய்= 2
- கிராம்பு= 4
- எண்ணெய் =5-6 ஸ்பூன்
- இஞ்சி= ஒரு துண்டு
- தேங்காய் நறுக்கியது= ஒரு கைப்பிடி அளவு
- தயிர்= கால் கப்
- தக்காளி =இரண்டு
- மிளகாய்த்தூள்= மூன்று ஸ்பூன்
- மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன்
- கறிமசாலா தூள் =1 ஸ்பூன்
- மட்டன் =அரை கிலோ
செய்முறை;
மட்டனை கழுவி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தயிர் , உப்பு சேர்த்து கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து விடவும் .இப்போது ஒரு பாத்திரத்தில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கொத்தமல்லி, சீரகம், மிளகு,பட்டை ,கிராம்பு 1,ஏலக்காய் , சோம்பு அரை ஸ்பூன் சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். பிறகு அதே எண்ணெயில் வெங்காயம், தக்காளி, பூண்டு ,இஞ்சி ஆகியவற்றையும் சேர்த்து நன்கு வதக்கி கடைசியாக தேங்காயும் சேர்த்து வதக்கி ஆறவைத்து அனைத்தையும் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு குக்கரில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு மற்றும் பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து ஊற வைத்த மட்டனையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஆறிலிருந்து ஏழு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். விசில் அடங்கியவுடன் குக்கரை திறந்து அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து நன்கு கலந்து விட்டு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் கறி மசாலா சேர்த்து கலந்து இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும். விசில் அடங்கியதும் குழம்பிலே கொத்தமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும். இப்போது கம கமவென மட்டன் குழம்பு தயார்.