சன்டே ஸ்பெஷல்.. அசத்தலான சுவையில் அவித்த முட்டை கிரேவி செய்யலாமா?..
Egg Recipes-வித்தியாசமான சுவையில் முட்டை கிரேவி செய்வது எப்படி என இப்பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருள்கள்;
- பெரிய வெங்காயம்= ஐந்து
- முந்திரி= ஆறு
- பூண்டு= 25 பள்ளு
- பச்சை மிளகாய்= 10
- இஞ்சி = 3 இன்ச்
- பட்டை= 3 துண்டு
- ஏலக்காய்= 5
- மிளகு= கால் ஸ்பூன்
- எண்ணெய் =50 எம்எல்
- சிக்கன் மசாலா= ஒரு ஸ்பூன்
- மிளகுத்தூள் =அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள்= 1/2 ஸ்பூன்
- தயிர் =200 கிராம்
- கொத்தமல்லி இலைகள் =சிறிதளவு
- முட்டை= ஏழு
செய்முறை;
முதலில் முட்டையை வேக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து முட்டையை வறுத்துக் கொள்ளவும் .இப்போது மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம் ,பூண்டு ,பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் 50 எம் எல் எண்ணெய் ஊற்றி அதில் ஏலக்காய் பட்டை, மிளகு ஆகியவற்றை சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து கிளறவும் .
இப்போது அதில் மஞ்சள் தூள், சிக்கன் மசாலா, மிளகுத்தூள் ,உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்து விடவும். இரண்டு நிமிடம் கலந்த பிறகு தயிர் மற்றும் அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைத்து விடவும். நன்கு எண்ணெய் பிரிந்து வந்த பிறகு வறுத்து வைத்துள்ள முட்டைகளை சேர்த்து ஐந்து நிமிடம் கலந்துவிட்டு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் நாவூறும் சுவையில் முட்டை கிரேவி தயார்.