சம்மர் தொடங்கியாச்சி..! கடைகளில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிடுவதர்க்கு பதில் இதை ட்ரை பண்ணி பாருங்க..!

ice apple

நுங்கு நமது உடலுக்கு என்னென்னஆரோக்கியதை அளிக்கிறது என்பது பற்றி பார்ப்போம்.

கோடைகாலம் தொடங்கி விட்டாலே நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே குளிர்ச்சியான உணவு பொருட்களை உட்கொள்வதை தான் விரும்புவதுண்டு. அந்த வகையில், குளிர்ச்சியான மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய நுங்கு நமது உடலுக்கு என்னென்னஆரோக்கியதை அளிக்கிறது என்பது பற்றி பார்ப்போம். நுங்கு, ஐஸ் ஆப்பிள் அல்லது தட்கோலா என அழைக்கப்படுகிறது.

ICE APPLE
ICE APPLE [IMAGE source : pharmeasy]

நுங்கில் சோடியம் மற்றும் பொட்டாசியம் தவிர கால்சியம் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன. வயிற்றில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாக காணப்படுகிறது. இது கோடையில் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் சோர்வை தடுக்க உதவுகிறது.

இது கோடையில் ஏற்படக்கூடிய தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு அளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. இருப்பினும், அதிக பழுத்த நுங்குகளை  உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது வயிற்று வலியை ஏற்படுத்தும்.

இது உடலுக்கு இயற்கையான குளிரூட்டியாக செயல்படுகிறது. நாம் கடைகளில் வாங்கி உண்ண கூடிய ஐஸ்கிரீம்களைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதிலாக நுங்கு வாங்கி சாப்பிடலாம். இது உங்கள் உடலை உள்ளே இருந்து இயற்கையாக குளிர்விக்கும். நுங்கில் சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாக உள்ளது, கடுமையான வெப்பத்தால் ஏற்படும் சோர்வைத் தடுக்கிறது. உடலின் எலக்ட்ரோலைட்டை சமநிலைபடுத்த உதவுகிறது.

ice apple
ice apple [Image Source ; TheIndianExpress ]

வெறும் 100 கிராம் நுங்கில்  87 கிராம் தண்ணீர் உள்ளது.  எனவே அன்றைக்கு நீங்கள் உட்கொள்ளும் தண்ணீரை அதிகரிக்கவும், வெளியில் வெப்பநிலை அதிகமாக இருக்கும்போது நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் இது ஒரு சிறந்த வழியாகும். மேலும், இதில் துத்தநாகம், இரும்பு, பொட்டாசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளது மற்றும் கல்லீரல் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

நுங்கு, கோடையில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். இது வெப்பமான காலநிலையில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.  இது மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்