பல் வலி- பல் வலி, பல் சொத்தை, பல் குழி இவற்றை குணமாக்க வீட்டு குறிப்புகளை இப்பதிவில் காணலாம்.
எதிர்பாராத நேரங்களில் தான் பல்வலி ஏற்படும். குறிப்பாக இரவு நேரத்தில் இதன் தீவிரம் சற்று அதிகமாகவே இருக்கும். சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருந்தால் அந்த சிறு சிறு உணவுப் பொருள்கள் பல் இடுக்குகளில் தங்கிவிடும். இது நாளடைவில் பாக்டீரியாக்களை உருவாக்கி பல்லை சேதப்படுத்தும். இதனால்தான் பல் சொத்தை ஏற்படுகிறது.
மஞ்சள் தூள், வேப்பிலை பொடி, கிராம்பு பொடி இவற்றை சம அளவு எடுத்து நல்லெண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும் .பிறகு இதை தொட்டு பல் துலக்க வேண்டும்.
பல் துலக்கிய பிறகு சுடு தண்ணீரில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து அதில் வாய் கொப்பளித்து விட வலி குறையும் .மேலும் பல் சேதமாவது தடுக்கப்படுகிறது. இது போல் அடிக்கடி செய்து வர முன்கூட்டியே பற்சிதைவு ஏற்படாமல் தடுக்கலாம்.
அரை ஸ்பூன் மிளகை தூள் ஆக்கி அதனுடன் சிறிது கல் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை சொத்தைப் பல்லுக்கு எதிரான பகுதியில் வைக்க வேண்டும். அதாவது கன்னத்தின் உள் பகுதியில் வைக்க வேண்டும். பல் சொத்தையும் வைக்கக்கூடாது.
இவ்வாறு வைத்த பிறகு உமிழ்நீர் சுரக்கும் அதை எக்காரணத்தை கொண்டும் விழுங்கி விடக்கூடாது. இவ்வாறு பத்து நிமிடங்கள் செய்துவிட்டு பிறகு தண்ணீரை கொண்டு வாய் கொப்பளித்து விடவும். இப்படி செய்தால் சிறிது நேரத்திலேயே பல்லில் உள்ள புழுக்கள் வெளியேறி வலியை போக்கும்.
மேலும் கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பற்கள் சுத்தமாகும். இனிப்பு சாப்பிட்ட உடனே வாய் கொப்பளிக்க வேண்டும் .
சிறு வயதிலிருந்து தினமும் இரவு தூங்குவதர்க்கு முன் சுடு தண்ணீரில் உப்பு கலந்து வாய் கொப்புளிக்க வேண்டும் .பிற்காலத்தில் சொத்தை பல் வருவது தடுக்கபடும் .
உணவுப் பொருள்களை சாப்பிட்ட பிறகு மறக்காமல் வாய் கொப்பளித்து விட வேண்டும். பான் மசாலா ,பாக்கு, புகையிலை போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இந்த பல் வலி இரவு நேரத்தில் ஏற்பட்டால் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத சூழ்நிலை இருக்கும் .அந்த சமயங்களில் இந்த எளிமையான வீட்டு குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…