பயணம் செய்யும்போது வாந்தி மற்றும் தலைவலியால் அவதிப்படுறீர்களா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!
பயணத்தின் போது ஒரு சிலருக்கு வாந்தியும் ஒரு சிலருக்கு தலைவலியும் ஏற்படும். இவ்வாறு ஏற்படும் சிறு சிறு தொந்தரவினால் அந்தப் பயணத்தை நாம் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். ஒரு சிலருக்கு பயணம் முடிந்து ஒரு சில நாள் கூட இந்த தொந்தரவு இருக்கும். இதற்குப் பெயர்தான் மோசன் சிக்னல் என்பார்கள். வாந்தி மற்றும் தலைவலி வராமல் இருக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் நாம் வாசிப்போம்.
நம் மூளைக்கு நாம் என்ன செய்கிறோம் என்று சிக்னல் அனுப்புவது நமது காதும் கண்ணும்தான். எனவே கண் அனுப்பும் தகவலும் காது அனுப்பும் தகவலும் சரியாக இல்லை என்றால் மூளை குழம்பி விடும். இதனால் மூளையானது இரைப்பையின் செரிமானத்தை நிறுத்தி வைக்கும். அப்போதுதான் நமக்கு வாந்தி ஏற்படுகிறது. இந்த நிலை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். ஒரு சிலருக்கு வாந்தியாகவும் ஒரு சிலருக்கு உடல் அதிக டயர்ட் ஆகவும் இருக்கும் இதுவே மோஷன் சிக்னலின் அறிகுறி ஆகும்.
வாந்தி ஏற்படுவதை தடுக்கும் குறிப்புகள் :
நாம் பயணம் மேற்கொள்ளும் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு எடுத்துக் கொள்வது சிறந்ததாகும். நீர் சத்து உள்ள சாப்பாடுகளை எடுத்துக் கொள்வது சிறந்தது. தயிர் சாதம் போன்ற உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயில் செய்த எந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.
பஸ்ஸில் போனால் வாந்தி வரும் என்ற எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும். அவ்வாறு நாம் நினைக்கும் போதும் பேசு போதும் நமது மூளையானது வாந்தி வருவதற்கான வேலைகளை செய்யத் தொடங்கி விடும். ஆகவே நமது சிந்தனையை திசை திருப்ப வேண்டும்.
அதிகமான காற்று காதுகளில் செல்லாதபடி காதுகளை மூடி கொள்ள வேண்டும். காது கேட்பதற்கும் மட்டுமில்லை. நமது உடலின் பிரஷர் மற்றும் வெளியில் உள்ள சுற்றுச்சூழலின் பிரஷரையும் பேலன்ஸ் படுத்துகிறது.
மருத்துவரின் ஆலோசனைப்படி பயணிக்கும் முன்பே மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.
எலுமிச்சை சாறுடன் சிறிது உப்பு கலந்து குடித்தால் குமட்டலை தடுக்கும்.
பயணிக்கும் போது ஆரஞ்சு மிட்டாய், நெல்லிக்காய் போன்றவை சாப்பிட்டு கொள்ளலாம். நொறுக்கு தீனிகளை தவிர்ப்பது நல்லது.
மேலும் முன் சீட்டில் பயணம் மேற்கொள்வது சிறந்ததாகும் ஏனென்றால் நமது கவனத்தை ஒரே இடத்தில் வைத்திருக்கும். இதனால் வாந்தி ஏற்படும் சிந்தனை இருக்காது.
ரயில்களில் பயணம் செய்யும்போது ரயில் போகும் திசை நோக்கி மட்டுமே உட்கார வேண்டும். ஆப்போசிட் சீட்டில் அமர்ந்து வருவதை தவிர்க்கவும்.
ஆகவே இந்த பயனுள்ள குறிப்புகளை செயல்படுத்தி ஒரு மகிழ்ச்சியான பயணத்தை மேற்கொள்ளுங்கள்.