லைஃப்ஸ்டைல்

சேற்று புண்ணால் அவதிப்படுகிறீர்களா? குணமாக உங்களுக்கான டிப்ஸ்!

Published by
K Palaniammal

மழைக்காலங்கள் வந்து விட்டாலே சேற்றுப்புண் அனைவருக்கும் வரும். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவதும் என தண்ணீரிலே அதிகம் நேரம் செலவிடுவதால் அதிகம் வரும். தேங்கியுள்ள மழை நீரில் கால் வைப்பது, மேலும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் பாதத்திற்கு சரியாக ரத்த ஓட்டம் இல்லாமல் இருப்பவை போன்றவற்றால் ஏற்படும். இது ஒரு பூஞ்சை தொற்று கிருமிகளால் ஏற்படும் அரிப்பே சேற்றுப்புண் ஆகும்.இந்தபூஞ்சை ஈர பதத்தில்    தான்  வளரும்.   சேற்றுப்புண் வந்தால் நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் வந்து விட்டால் அதை குணப்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

நம் பாதங்களை பாதுகாக்கும் முறை:

பாதங்களை சுத்தம் செய்து உலர்ந்த நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தேங்கியுள்ள மழை நீரில் மிதிக்காமல் இருக்க வேண்டும். ஒருவேளை தண்ணீர் பட்டால் பாதங்களை துணியால் சுத்தம் செய்து உலர்த்த வேண்டும்.
வெளியில் செல்லும்போது காலில் தேங்காய் எண்ணெய்களை தேய்த்துச் சென்றாள் அந்த என்ன பசைக்கு ஈரம் காலில் ஒட்டாது.
வாரம் ஒரு முறை வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் எலுமிச்சை பழத்தை பிழிந்து 20 நிமிடம் கால்களை அதில் ஊற வைத்து பராமரித்துக் கொள்ள வேண்டும்.

குணப்படுத்தும் முறை:

மஞ்சள் மற்றும் வேப்பிலை அரைத்து சேற்றுப்புண் மேல் அரைத்து பூச வேண்டும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணையை கலந்து சேற்றுப் புண்ணில் தடவி வர வேண்டும். இது கிருமிகளை கொள்ளக்கூடிய தன்மை உள்ளது .

யூகலிப்டஸ் ஆயில் மற்றும் கற்றாழை சென்னை சேர்த்து அரிப்பு இருக்கும் இடத்தில் போட்டு இரண்டு மணி நேரம் கழித்து கழுவி வர வேண்டும்.
வரலாம்.

மண்ணெண்ணையை சேற்றுக் புண் இருக்கும் இடத்தில் போட்டால் விரைவில் குணமாகும் மேலும் அரிப்பையும் கட்டுப்படுத்தும். காலணிகளை மாற்றி மாற்றி அணிய வேண்டும். ஒரே காலணிகளை போடுவதை தவிர்க்கவும். எட்டு மணி நேரத்திற்கு மேல் ஷூ அணிவதை தவிர்க்கவும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மருத்துவரை அணுகுவதே சிறந்தது. ஆகவே கூறியுள்ள வழிமுறைகளை பின்பற்றி கால்களை பராமரித்து மழைக்காலத்தில் ஏற்படும் சேற்றுப் புண்ணை தடுக்கலாம். வருமுன் காப்பதே சிறந்ததாகும்.

Published by
K Palaniammal

Recent Posts

பொள்ளாச்சி வழக்கு : நீதிபதி மாற்றம்.. தீர்ப்பு தேதியில் எந்த மாற்றமா.?

பொள்ளாச்சி : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…

13 minutes ago

தண்ணீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி உயிரிழப்பு! பள்ளி தாளாளர் கைது!

மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…

47 minutes ago

“3ஆவது குழந்தை பெற்றுக்கொள்ள சலுகை வேண்டும்” – திமுக எம்எல்ஏ மதியழகன் கோரிக்கை.!

சென்னை :  கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…

1 hour ago

“அடிச்சி நொறுக்குவேன்..,” சொன்ன சம்பவத்தை செய்து காட்டிய இளம் வீரர் வைபவ்!

ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…

2 hours ago

சித்திரைத் திருவிழா : மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் கொடியேற்றம்.!

மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…

2 hours ago

இனி ‘காலனி’ என்ற சொல் கிடையாது! முதலமைச்சர் திட்டவட்ட அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…

3 hours ago