21 நாட்களில் வெற்றி உங்களுக்கு தான்.! உடற்பயிற்சியை ஒதுக்கி வையுங்கள்… இதனை செய்யுங்கள்..

Morning Habbits

Morning Habits : நம்மில் பெரும்பாலானோர் காலையில் எழுந்திருக்கிறோம். முதல் வேலையாக முகம் கழுவும் முன்னர் போனை கையில் அடுத்து அதில் உள்ள சமூக வலைதள பதிவுகளை தவறாமல் பார்க்கிறோம். அப்படியே முகம் கழுவி, காபி குடித்து, காலை கடன் என மொபைல் போன் பார்த்தே செல்கிறோம். குளிக்கும் நேரம் தவிர்த்து வேலைக்கோ, பள்ளிக்கோ செல்லும் முன்பு வரையில் நம்மிடம் நமது போன் தான் இன்னொரு கையாக இருக்கிறது.

பின்னர் திடீரென ஒரு நாள் இத்தனை நாள் போன் உபயோகித்து நாட்களை வீணடித்து விட்டோம் என நினைத்து, உடனடியாக அதே போனில் இனி வாழ்வில் உருப்பட என்ன செய்ய வேண்டும் என் தேடி, அதில் வரும் காலை நடவடிக்கைகளை உடனடியாக பின்பற்ற ஆரம்பிக்கிறோம்.

என்ன செய்வீர்கள்.?

அதில் அவர்கள், அதிகாலையில் எழுந்திருக்க வேண்டும். தண்ணீர் பருகி உடற்பயிற்சி செய்ய வேண்டும். யோகா செய்ய வேண்டும், பின்னர், புத்தகம் படிக்க வேண்டும். பின்பு இன்று என்னென்ன செய்ய வேண்டும் என குறிப்பிடுக்க வேண்டும் என ஒரு பெரிய லிஸ்ட் போடுவார்கள்.

குட் ‘பை’ :

அதனை அப்படியே அடுத்த நாளே ஃபாலோ செய்து இனி நாம் வாழ்வில் முன்னேற போகிறோம் என காலையில் இதனை செய்து பின்னர் உடனடியாக உங்கள் மூளை இதனை ஏற்க மறுத்து சோர்வாகிவிடும். அதன் பின்னர் உங்கள் அன்றாட வேலை, படிப்பு என காலையிலேயே ஒரு சோர்வான மனநிலையில் இருப்பீர்கள். அடுத்து என்ன ஒரு வாரம் கழித்து காலை நடவடிக்கைக்கு குட்பை தான்.

மூளையின் முழு சக்தி :

இதற்கு அறிவியல்பூர்வ ஆய்வறிக்கை ஒன்று உள்ளது. அதாவது காலையில் எழுந்த உடன் உங்கள் மூளை முழு சக்தியுடன் இருக்கும். அப்போது போனை ஓரம்கட்டி, நீங்கள் திணிக்க நினைக்கும் காலை நடவடிக்கைகளை ஓரம்கட்டி, உங்களுக்கு தேவையான செயல்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

திட்டமிடல் :

உதாரணத்திற்கு நீங்கள் வேலை செய்து வருகிறீர்கள். அதில் அடுத்த நிலைக்கு செல்ல, இல்லை அன்றைய நாள் வேலையை செய்ய என்னென்ன புதிய யுத்திகளை கற்க முடியுமோ அதனை செய்துவிடுங்கள். புதிதாக படித்து விடுங்கள், இல்லை உங்கள் வேலையை திட்டமிடுங்கள். ஒரு மணி நேரத்தில் அன்று செய்ய வேண்டிய முக்கால்வாசி வேலையை எளிதில் முடித்து விடுவீர்கள்.

இதுதான் பிளான் :

அதன் பின்னர் உங்கள் மூளை சோர்வடையும். அதன் பின்னர் உடலுக்கு தேவையான உடற்பயிற்சி செய்வது, இன்று அடுத்து என்ன செய்ய வேண்டும் என எழுதுவதை செய்யுங்கள். அப்போது உங்கள் மூளைக்கு சிறுது ஓய்வு கிடைக்கும். பின்னர் நீங்கள் வேலைக்கு, அல்லது கல்லூரிக்கு செல்லும் போது நீங்கள் ஏற்கனவே செய்த பயிற்சி உங்களை சோர்வடைய வைக்காது. அப்போது நீங்கள் மெனெக்கெட்டு வேலை செய்தது போல இருக்காது. அதன் பின்னர் மாலை வந்த பின்னர், மீண்டும் உடல் சோர்வாக இருக்கும். அப்போது உங்களுக்கு பிடித்த விஷயங்களில் நேரத்தை செலவிடுங்கள்.

21 நாட்கள்…

இரவு தூங்கும் முன்னர் காலையில் எழுந்த உடன் இதனை தான் செய்ய போகிறோம் என்பதை குறித்து வைத்து கொள்ளுங்கள். முதலில் உங்களுக்கு தேவையான ஒன்றை செய்து முடித்துவிட்டு பின்னர் காலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வாருங்கள். இதனை முதலில் 21 நாளில் செய்து வந்தாலே உங்கள் வாழ்வில் மிக பெரிய மாற்றம் ஏற்படுவதை நீங்கள் காணலம்…அதன் பிறகு அதனை அப்படியே ஃபாலோ செய்து வாழ்வில் முன்னேறுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்