மாதுளை பிரியர்களே.! மறந்தும் கூட இந்த நேரத்தில் மாதுளையை சாப்பிடாதீங்க..

பொதுவாக சிவப்பு நிறம் கொண்ட பழங்கள் அனைத்துமே எண்ணற்ற பயன்களை ஒளித்து வைத்திருக்கும். அதிலும் மாதுளை எண்ணில் அடங்கா நன்மைகளை வைத்துள்ளது. அதனால்தான் முத்துக்களின் ராணி எனவும் புகழப்படுகிறது.பல மாத்திரைகள் சேர்ந்து செய்யக்கூடிய இசையத்தை இந்த மாதுளை அசால்டாக செய்துவிடும்.இதில் விட்டமின் ஏ ,விட்டமின் சி ,கே, ஒமேகா 5 ஆன்ட்டி ஆக்சிடென்ட், மற்றும் பாலிபீனால்,இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது.
இதில் பாலிபீனால் அதிகம் உள்ளதால் வாதம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கும். வயதானவர்களுக்கு ஏற்படும் அல்சைமர் நோய் வராமல் தடுக்கும். இதை குழந்தைகளுக்கு தினமும் ஒன்று கொடுத்து வர நல்ல ஞாபக சக்தியை அதிகப்படுத்தும். மேலும் பெண்களுக்கு ஏற்படும் மார்பகப் புற்றுநோயை தடுக்க கூடியது என பல ஆய்வுகளில் கூறுகின்றனர்.
கருவுற்ற பெண்கள் தினமும் ஒன்று சாப்பிட்டு வர குழந்தை ஆரோக்கியமாகவும் நல்ல மூளை செயல்பாட்டுத் திறனையும் கொண்டு பிறக்கும். முகப்பரு மற்றும் கரும்புள்ளி இருக்கும் இடத்தில் இதன் சாறை வைத்து வர நாளடைவில் மறைந்துவிடும். அல்சர் இருப்பவர்கள் தினமும் ஜூசாக எடுத்து வந்தால் விரைவில் குணமடையும். அது மட்டுமில்லாமல் ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்கச் செய்யும். இருமல் இருப்பவர்கள் மாதுளை சாற்றுடன் இஞ்சி கலந்து எடுத்து வந்தால் வரட்டு இருமல் குணமாகும்.
அடடே இது தெரியாம போச்சே! தயிர் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா?
ஒவ்வொரு பழத்திலும் ஒவ்வொரு தன்மை உள்ளது அது போல் பழங்களை சாப்பிடுவதற்கும் நேரம் உள்ளது. பொதுவாக பழங்களை காலை நேரங்களில் எடுத்துக் கொள்வது சிறந்தது. அதுவும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் அதன் முழு பலனையும் நாம் அடையலாம். ஏனென்றால் மற்ற நேரங்களை காட்டிலும் எளிதாக செரிக்க வைத்து அதன் முழுபலனையும் கிடைக்கச் செய்யும்.
எந்த ஒரு பழத்தையும் தூங்குவதற்கு முன் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், ஏனென்றால் பழங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். அதை இரவு நேரத்தில் எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிப்பதோடு தூக்கமின்மை, செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இது மாதுளைக்கு சற்று அதிகமாகவே பொருந்தும். மாதுளை சாப்பிடுவதற்கும் முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு பிறகு மாதுளை எடுத்து வந்தால் சிறந்தது.
எந்த ஒரு பழத்தையும் ஜூஸ் ஆக எடுத்துக் கொள்வதை விட அதை கடித்து மென்று சாப்பிடுவதே உடலுக்கு ஆரோக்கியம். மாதுளை உரித்து சாப்பிடுவது சற்று சிரமமாக இருந்தாலும் அதன் எண்ணற்ற பயன்களை நாம் பெற வேண்டும் என்றால் தினமும் ஒன்று எடுத்து வரவேண்டும். வாரத்தில் நான்கு முறையாவது எடுத்துக் கொள்வது சிறந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025